கஜகஸ்தானின் அஸ்தானாவில் நடைபெற்று ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் நடைபெற்றுவருகின்றான. அதில் இந்திய மல்யுத்த வீராங்கனைகள் நிஷா தஹியா மற்றும் பிரியா ஆகியோர் தங்களுடைய எடைப் பிரிவில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
பெண்களுக்கான போட்டியில் 76 கிலோ பிரிவில் போட்டியிட்ட பிரியா, சீன தைபே வீராங்கனை ஹுய் ட்ஸ் சாங்கை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்து தகுதி கட்டத்தை கடந்தார். ஆனால் காலிறுதியில் கிர்கிஸ்தானின் ஐபெரி கைஸியிடம் தோற்றுப்போனார்.
நேற்று (2023, ஏப்ரல் 12, செவ்வாய்க்கிழமை) ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மல்யுத்த வீரர்கள் நிஷா தஹியா மற்றும் பிரியா ஆகியோர் தங்களுடைய எடைப் பிரிவில் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களை வென்றனர். கடந்த ஆண்டு 65 கிலோ பிரிவில் U23 உலக சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற நிஷா, கசாக் போட்டியில் 68 கிலோ பிரிவில் போட்டியிட்டார்.
ஜப்பானிய வீராங்கனையும், 2022 உலக சாம்பியன்ஷிப் வெள்ளிப் பதக்கம் வென்றவருமான அமி இஷியிடம், போட்டியிட்ட நிஷாவை அவர் தோற்கடித்தார். இஷி போட்டியில் வெற்றி பெற்று தங்கம் வெல்ல, நிஷா வெள்ளிப்பதக்கம் வென்றார்.
மேலும் படிக்க | IPL 2023: 'நாங்கள் அதனால் தான் தோற்றோம்' - கேப்டன் தோனி கூலாக சொன்னது என்ன?
பெண்களுக்கான 76 கிலோ பிரிவில் போட்டியிட்ட பிரியா, சீன தைபே வீராங்கனை ஹுய் ட்ஸ் சாங்கை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்து தகுதி கட்டத்தை கடந்தார். ஆனால் காலிறுதியில் கிர்கிஸ்தானின் ஐபெரி கைஸியிடம் தோற்றார். வெண்கலப் பதக்கப் போட்டியில், U17 உலக சாம்பியனான பிரியா 2-1 என்ற கணக்கில் ஜப்பானின் மிசுகி நாகஷிமாவை தோற்கடித்து வெண்கலம் வென்றார். இந்த இரண்டு பதக்கங்களுடன், சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கு முந்தைய நாட்களில், கிரேக்க-ரோமன் மல்யுத்த வீராங்கனை ரூபின் (55 கிலோ) வெள்ளியும், நீரஜ் (63 கிலோ), விகாஸ் (72 கிலோ), சுனில் குமார் (87 கிலோ) ஆகியோர் வெண்கலப் பதக்கங்களையும் வென்றனர். நீலம் (50 கிலோ), சிட்டோ (55 கிலோ), சரிதா மோர் (59 கிலோ) ஆகியோர் வெண்கலப் பதக்கங்களை வென்றனர்.
இந்திய மகளிர் மல்யுத்த வீராங்கனைகளான யு20 உலக சாம்பியன் ஆண்டிம் பகல் (53 கிலோ), அன்ஷு மாலிக் (57 கிலோ), சோனம் மாலிக் (62 கிலோ), மனிஷா (65 கிலோ) மற்றும் ரீத்திகா ஹூடா (72 கிலோ) ஆகியோர் இன்று தங்கள் போட்டிகளில் களம் காண்கின்றனர்.
கடந்த ஆண்டு மங்கோலியாவில் நடந்த மல்யுத்தப் போட்டியில் இந்திய பெண்கள் மல்யுத்த வீரர்கள் இரண்டு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்களை வென்றனர். ஏப்ரல் 9 ஆம் தேதி அஸ்தானாவில் தொடங்கிய ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் ஏப்ரல் 14 ஆம் தேதியுடன் முடிவடையும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ