Ravi Shastri: உலக அளவில் கிரிக்கெட் போட்டிகளில் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. ஒவ்வொரு நாடும் அந்தந்த நாடுகளில் 20 ஓவர் கிரிக்கெட் லீக்குகளை நடத்துகின்றன. இந்தியாவில் ஐபிஎல் போட்டியும், ஆஸ்திரேலியாவில் பிக் பாஸ் கிரிக்கெட் லீக்கும் நடத்தப்படுகின்றன. பாகிஸ்தானில் பாகிஸ்தான் பிரிமியர் லீக், வெஸ்ட் இண்டீஸில் கரீபியன் கிரிக்கெட் லீக் உள்ளிட்ட 20 ஓவர் தொடர்கள் நடத்தப்படுகின்றன. இதனால் சர்வேசப் போட்டிகளின் நிலை கேள்விக்குறியாகி உள்ளது. குறிப்பாக, இரு தரப்பு போட்டிகள் இனிவரும் காலங்களில் நடத்தப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மேலும் படிக்க | ராகுல் டிராவிட்டை டான்ஸ் ஆட வைத்த ஷிகர் தவான்! வைரலாகும் வீடியோ!
தென் ஆப்பிரிக்க அணி 2023 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுடன் 20 ஓவர் தொடரில் விளையாட இருந்தது. ஆனால் தங்கள் நாட்டில் புதிதாக 20 ஓவர் கிரிக்கெட் லீக்கை தொடங்கி இருப்பதால், அந்த தொடரில் ரத்து செய்ய திட்டமிட்டுள்ளது. இதே போல் இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கேப்டன் ஸ்டோக்ஸ் ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். மூன்று வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் தொடர்ந்து விளையாட முடியாது என்பதால் இத்தகைய முடிவு எடுத்திருப்பதாக அவர் தெரிவித்து இருந்தார்.
இந்த செய்திகள் கிரிக்கெட் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. சர்வதேச போட்டிகளின் அட்டவணை கேள்விக்குறியாவதைக் கருத்தில் கொண்டு 20 ஓவர் போட்டிகளை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார. இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் உடன் நடைபெற்ற உரையாடலில் இந்த கருத்தை தெரிவித்திருக்கிறார். அனைத்து நாடுகளும் இதுகுறித்து பரிசீலிக்க முன்வர வேண்டும் எனவும் ரவி சாஸ்திரி வலியுறுத்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஒருநாள் போட்டிகள் பாதிக்கக்கூடாது என்று அவர் கூறியுள்ளதற்கு பலரும் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் படிக்க | CSKவிலிருந்து விலகியதை உறுதி செய்த ஜடேஜா? - இன்ஸ்டாகிராம் பதிவு வைரல்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ