ஆஸ்திரேலிய அணிக்காக மூன்று முறை 50 ஓவர் உலகக்கோப்பை வென்று கொடுத்த கேப்டனான ரிக்கிப் பாண்டிங், எதிர்வரும் 20 ஓவர் உலகக்கோப்பை குறித்து பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். 20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் விக்கெட் கீப்பர்களாக தினேஷ் கார்த்திக் மற்றும் ரிஷப் பன்ட் ஆகியோர் இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். திறமையான வீரர்கள் ஏரளாமானோர் இருப்பதால் இந்திய கிரிக்கெட் அணியில் பல முன்னெற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க | 9 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த அணியுடன் விளையாடும் விராட் கோலி!
டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் ரிஷப் பன்ட் சிறப்பாக விளையாடினாலும், 20 ஓவர் போட்டிகளில் குறிப்பிடப்படும்படியான ஆட்டங்களை சர்வதேச அளவில் விளையாடவில்லை. ஆனால், நீண்ட நாட்களுக்குப் பிறகு இந்திய 20 ஓவர் அணிக்கு திரும்பிய தினேஷ் கார்த்திக், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் தனக்கு கொடுக்கப்பட்ட பினிஷர் ரோலை சிறப்பாக செய்தார். அதேநேரத்தில், இன்னொரு இளம் வீரரான இஷான் கிஷன் கிடைக்கும் வாய்ப்புகளை வீணடித்து வருவதால் அவர், உலகக்கோப்பைக்கான அணியில் வேண்டாம் என ரிக்கிப் பாண்டிங் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசும்போது, " 50 ஓவர் கிரிக்கெட்டில் ரிஷப் என்ன திறமைசாலி என்பதை நாம் பார்த்தோம். டி20 ஆட்டத்தில் அவர் என்ன திறன் கொண்டவர் என்பதை நான் அறிவேன். தினேஷ் கார்த்திக் மிக சமீபத்தில் தனது சிறந்த ஐபிஎல்லைப் விளையாடியுள்ளார். அவர்கள் இருவரும் 20 ஓவர் உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அவர்களுக்கு அடுத்த இடத்தில் அல்லது முன்பாக கூட இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் ஹர்திக் பாண்டியா இருக்க வேண்டும். அவர் தன்னை ஒரு ஆல்ரவுண்டராக நிரூபித்துள்ளார்.
மேலும் படிக்க | தோனி வாங்கியிருக்கும் புதிய 2 கார்கள்! அப்படி என்ன ஸ்பெஷல்?
சூர்யகுமார் யாதவுக்கும் இடம் இருக்கும் என்று நம்புகிறேன். இவர்கள் இருக்கும் அணியில் ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் இஷான் கிஷனுக்கான வாய்ப்பு இருப்பது மிகவும் கடினம். சூர்யகுமார் யாதவுக்கே அணியில் இடம் இருக்குமா? என்பது சந்தேகம் தான். ஏனென்றால், இப்போதைய இந்திய கிரிக்கெட்டில் திறமையான வீரர்கள் அதிகம் உள்ளனர். அவர்கள் அனைவரும் பிளேயிங் லெவனில் விளையாடுவது என்பது கடினமான காரியம். அணியை தேர்வு செய்வது என்பதும் சிக்கலான விஷயம்" எனத் தெரிவித்துள்ளார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ