என் வாழ்வில் முக்கியமான 5 பெண்கள்: கிரிக்கெட் ஜாம்பவான் வீடியோ வெளியீடு!

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தனது வாழ்வில் முக்கியமான 5 பெண்களை பற்றி புகழ்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Last Updated : Mar 8, 2020, 04:14 PM IST
என் வாழ்வில் முக்கியமான 5 பெண்கள்: கிரிக்கெட் ஜாம்பவான் வீடியோ வெளியீடு! title=

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தனது வாழ்வில் முக்கியமான 5 பெண்களை பற்றி புகழ்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 பெண்களை போற்றும் விதமாக உலகம் முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மகளிர் தினத்திற்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு 5 பெண்களை பற்றி புகழ்ந்து கிரிக்கெட் வீரர் சச்சின் வீடியோ வெளியிட்டுள்ளார். அதில்., 

என் வாழ்க்கையில் 5 பெண்கள் முக்கிய பங்காற்றியுள்ளனர். என்னுடைய அம்மா, என்னுடைய அத்தை, என்னுடைய மனைவி அஞ்சலி, மனைவியின் தாயார், என்னுடைய மகள் சாரா என ஐந்து பேரை சச்சின் குறிப்பிட்டுள்ளார். என்னுடைய ஆரோக்கியத்திற்கும், உடல்நலத்திற்கும் என் அம்மாவே காரணம். அத்தை, மனைவி, மகள் என ஒவ்வொருவரையும் குறித்து தன் நினைவுகளையும், தன் எண்ணங்களையும் வீடியோவில் சச்சின் பகிர்ந்துகொண்டுள்ளார்.

 

 

Trending News