Commonwealth மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை தங்கப்பதக்கம்!!

காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 62 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக் தங்கம் வென்றார்.

Last Updated : Dec 18, 2017, 08:52 AM IST
Commonwealth மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்திய வீராங்கனை தங்கப்பதக்கம்!! title=

காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் 62 கிலோ எடைப்பிரிவில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக் தங்கம் வென்றார்.

காமன்வெல்த் மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி தென் ஆப்ரிக்காவில் நடைபெற்று வருகின்றன. நேற்றய போட்டியில் இந்திய அணியின் சார்பில் மொத்தம் 60 வீரர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இன்றய இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக் நியூசிலாந்து வீராங்கனை டைலா டுவைன் போர்டை எதிர்கொண்டார். 

இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய சாக்‌ஷி 13-2 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றார். இதையடுத்து 62 கிலோ எடைப்பிரிவில் சாக்‌ஷி மாலிக் தங்கம் வென்றார்.

Trending News