Shocking: அலைகழிக்கும் BCCI, கோவிட் சிகிச்சைக்கு வழியின்றி தவிக்கும் கிரிக்கெட் வீரர்

பல கிரிக்கெட் வீர்ரகள் கோடிகளில் சம்பாதிகும் நிலையில், ஆயிரத்தில் தொகையைப் பெற கூட ஆண்டுகளாக காத்திருக்கும் கிரிக்கெட் வீரர்களும் உள்ளனர் என்பது வியப்பை அளிக்கின்றது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 3, 2021, 09:28 AM IST
  • BCCI உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக உள்ளது.
  • BCCI தன் வீரர்கள் மீது பண மழையைப் பொழிவது போல தோன்றுகிறது.
  • ஆனால் சில வீரர்கள் பல ஆண்டுகளாக தாங்கள் ஆடிய போட்டிகளுக்கான தொகைக்காக காத்திருக்கிறார்கள்.
Shocking: அலைகழிக்கும் BCCI, கோவிட் சிகிச்சைக்கு வழியின்றி தவிக்கும் கிரிக்கெட் வீரர்   title=

புதுடெல்லி: BCCI உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக உள்ளது. ஒரு புறம் BCCI தன் வீரர்கள் மீது பண மழையைப் பொழிவது போல தோன்றுகிறது. எனினும், மறுபுறம் நிலைமை அப்படியே மாறுபட்டு உள்ளது. 

அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தவல்ல BCCI-ஐப் பற்றிய ஒரு செய்தி வெளிவந்துள்ளது. உலகின் மிக பணக்கார கிரிக்கெட் அமைப்பான BCCI, சில கிரிக்கெட் (Cricket) வீரர்களுக்கு 2 ஆண்டுகளாக கிரிக்கெட் போட்டிகளுக்கான கட்டணத்தை (Match Fees) இன்னும் கொடுக்காமல் உள்ளது என தெரியவந்துள்ளது. 

இந்த 21 வயது வீரருக்கு 2 வருடங்களாக மேட்ச் கட்டணம் கிடைக்கவில்லை

21 வயதான வேகப்பந்து வீச்சாளர் பிரசாந்த் சிங், பீகார் 23 வயதுக்குட்பட்ட அணியின் உறுப்பினர் ஆவார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த 2 ஆண்டுகளாக இந்த வீரருக்கு மேட்ச் கட்டணம் கொடுக்காமல் உள்ளது. பிரசாந்தின் மூத்த சகோதரருக்கு கொரோனா தொற்று (Coronavirus) ஏற்பட்டுள்ளது. அவரது தாயின் உடல்நிலையும் சரியில்லை. அவருக்கு சுவாசிப்பதில் சிக்கல் உள்ளது. இந்த சூழ்நிலையில், பிரசாந்த் சிங்கிற்கு கடுமையான பண தேவை உள்ளது. 

ALSO READ: T20 World Cup: இந்தியாவை விட்டு செல்கிறதா டி-20 உலகக் கோப்பை? கொரோனா எதிரொலி?

ஒரு ஊடக அறிக்கையின் படி, பீகார் கிரிக்கெட் வீரர்களுக்கு இரண்டு ஆண்டுகளாக BCCI மேட்ச் கட்டணத்தை வழங்கவில்லை. பீகாரின் அண்டர் 23, அண்டர் 19 மற்றும் மூத்த வீரர்களுக்கான அணிகள் 2019-20 மற்றும் 2020-21 சீசன்களுக்கான போட்டிக் கட்டணங்களுக்காக இன்னும் காத்திருக்கின்றன.

வீரர்களுக்கு பணம் கிடைப்பது இப்படித்தான்

BCCI சமீபத்தில் சையத் முஷ்டாக் அலி டி 20 டிராபியையும், 50 ஓவர்களுக்கான விஜய் ஹசாரே டிராபியையும் ஏற்பாடு செய்தது. இவற்றில் 50 ஓவர் போட்டிக்கு 25 ஆயிரம் ரூபாயும், டி 20 போட்டிக்கு 12,500 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 23 வயதுக்குட்பட்ட அணியின் வீரர்களுக்கு நான்கு நாள் போட்டிக்கு 63 ஆயிரமும், ஒருநாள் போட்டிக்கு 17,500 ரூபாயும் வழங்கப்படுகிறது. செயல்முறையின் படி, இந்த தொகையைப் பெற, கிரிக்கெட் வீரர்கள் அந்தந்த மாநில சங்கங்களிடம் விலைப்பட்டியல், அதாவது இன்வாய்சை சமர்ப்பிக்க வேண்டும். மாநில கிரிக்கெட் வாரியம் இதை சரிபார்த்து, BCCI-க்கு அனுப்பி வைக்கும். அதன் பிறகு வீர்ரகளுக்கு தொகை அனுப்பப்படும்.

தற்போது எங்கு தவறு நடந்தது என்பது தெரியாமல் பீகார் கிரிக்கெட் வீர்ரகள் குழப்பத்தில் உள்ளனர். தாங்கள் ஆடிய போட்டிகளுக்கான தொகையைப் பெற காத்திருக்கின்றார்கள் இந்த வீரர்கள். பல கிரிக்கெட் வீர்ரகள் கோடிகளில் சம்பாதிகும் நிலையில், ஆயிரத்தில் தொகையைப் பெற ஆண்டுகளாக காத்திருக்கும் கிரிக்கெட் வீரர்களும் உள்ளனர் என்பது வியப்பை அளிக்கின்றது.

ALSO READ: IPL 2021, PBKS vs DC: 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி வெற்றி

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News