IPL 2021: தோனியின் முடிவால் வெற்றியை இழந்த CSK, ரசிகர்கள் அதிருப்தி

IPL 2021: கீரோன் பொல்லார்ட் 34 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 87 ரன்கள் எடுத்தார், இதில் 6 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்கள் அடங்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 2, 2021, 12:23 PM IST
IPL 2021: தோனியின் முடிவால் வெற்றியை இழந்த CSK, ரசிகர்கள் அதிருப்தி title=

புதுடெல்லி: மும்பை இந்தியன்ஸுக்கு (Mumbai Indians) எதிராக சனிக்கிழமை நடைபெற்ற விறுவிறுப்பான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) 4 விக்கெட் வித்தியாசத்தில் 217 ரன்கள் எடுத்தது. இந்த போட்டியில், கேப்டன் மகேந்திர சிங் தோனியின் தவறான முடிவு சென்னை சூப்பர் கிங்ஸால் தோல்வியை சந்திக்க நேர்யிட்டது. கீரோன் பொல்லார்ட் 34 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 87 ரன்கள் எடுத்தார், இதில் 6 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்சர்கள் அடங்கும். பொல்லார்ட் இன் சிறப்பான ஆட்டம் காரணமாக மும்பை அணி நேற்று அபார வெற்றி பெற்றது.

மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) கடைசி பந்தில் 219 ரன்கள் எடுத்து வெற்றியை பெற்றது. கீரோன் பொல்லார்டுக்கு (Kieron Pollard) எதிரான கடைசி பந்தில் தோனி பவுண்டரியில் ஒருவரை நிறுத்தி வைத்தார். 30 யார்டு வட்டத்தில் ஒரு பீல்டர் கூட இல்லை, இதனால் பொல்லார்ட் இரண்டு ரன்களை எளிதாக எடுக்க சாதகமாக அமைந்தது. 

இந்த தோல்விக்குப் பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் தோனியின் முடிவை ஆதரித்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பொல்லார்ட்டைப் பற்றி எச்சரிக்கையாக இருப்பதாகவும், எனவே 30 யார்டு வட்டத்தில் ஒரு பீல்டர் இல்லை என்றும் ஃப்ளெமிங் கூறினார். பொல்லார்ட் பந்தின் ஒரு நல்ல டைமர், அவர் என்ன செய்யப் போகிறார் என்பது உங்களுக்கு ஒருபோதும் தெரியாது என்று கூறினார். 

ALSO READ | IPL 2021, CSK vs MI: கடைசி பந்தில் மும்பை அணி வெற்றி, கிட்ட வந்து கோட்டை விட்ட CSK

கீரன் பொல்லார்ட் 34 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 87 ரன்கள் எடுத்தார். சனிக்கிழமை நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கீரன் பொல்லார்ட் நடப்பு சீசனில் வெறும் 17 பந்துகளுடன் வேகமான அரைசதத்தை முடித்ததோடு, நான்காவது விக்கெட்டுக்கு 41 பந்துகளில் 89 ரன்கள் எடுத்தார். இது ஏழு போட்டிகளில் மும்பையின் நான்காவது வெற்றியாகும், மேலும் 8 புள்ளிகளுடன் அணி புள்ளிகள் அட்டவணையில் நான்காவது இடத்தில் உள்ளது. ஏழு போட்டிகளில் சென்னை இரண்டாவது தோல்வியை சந்தித்துள்ளது மற்றும் அணி புள்ளிகள் அட்டவணையில் 10 புள்ளிகளுடன் இன்னும் முதலிடத்தில் உள்ளது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News