ஷ்ரேயாஸ் ஐயரால் கோலியின் இடத்திற்கு ஆபத்து?

ஸ்ரீலங்கா அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகளிலும் ஷ்ரேயாஸ் ஐயர் அவுட்டாகாமல் 204 ரன்கள் குவித்துள்ளார்.

Written by - RK Spark | Last Updated : Feb 28, 2022, 12:51 PM IST
  • மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20-ல் 16 பந்தில் 25 ரன்கள் எடுத்தார்.
  • ஷ்ரேயாஸ் ஐயரின் அபாரமான ஆட்டம் டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் அவரது பெயரை உறுதிபடுத்தி உள்ளது.
ஷ்ரேயாஸ் ஐயரால் கோலியின் இடத்திற்கு ஆபத்து? title=

ஸ்ரீலங்கா அணிக்கு எதிரான 3 டி20 போட்டிகளிலும் ஷ்ரேயாஸ் ஐயர் அவுட்டாகாமல் 204 ரன்கள் குவித்துள்ளார்.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்கு முன்னதாக கோஹ்லிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. இந்திய அணியின் டாப் ஆர்ட்டரில் கோலியின் 3வது இடத்தில் பேட்டிங் செய்த ஐயர், மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டி20-ல் 16 பந்தில் 25 ரன்கள் எடுத்தார், அதைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிரான சீரிஸில் மொத்தமாக 204 ரன்கள் குவித்து, தொடர்ந்து மூன்று போட்டிகளில் ஆட்டமிழக்காமல் அரைசதம் அடித்தார்.  இலங்கைக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஷ்ரேயாஸ் ஐயரின் அபாரமான ஆட்டம் டி20 உலகக் கோப்பை அணிக்கான இந்திய அணியில் அவரது பெயரை உறுதிபடுத்தி உள்ளது.  ஷ்ரேயாஸ் ஐயரால் விராட் கோலியின் இடத்திற்கு பாதிப்பு வருமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.  

shreyasiyer

மேலும் படிக்க | Ind vs SL T20: இலங்கை அணியை டி-20 தொடரில் மண்ணைக் கவ்வ வைத்த இந்திய கிரிக்கெட் அணி

கோஹ்லி அணிக்கு திரும்பியவுடன், ஐயர் வேறு பேட்டிங் ஆர்ட்டரில் பேட்டிங் செய்ய வேண்டும்.  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20ஐ தொடரில் சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகன் விருது வென்றார். எனவே அவரும் டாப் ஆர்ட்டரில் விளையாட வேண்டும்.  மேலும் அணியில் ரிஷப் பந்த் உள்ளார், இதனால் ஷ்ரேயாஸை எந்த இடத்தில் இறக்குவது என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.  இது குறித்து பேசிய இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் "இது ஒரு பெரிய பிரச்சனை, விராட் கோலியை மாற்ற முடியாது, அவர் நம்பர் 3-ல் வருவார், அதைப் பற்றி எந்த கேள்வியும் இல்லை. ஆனால், ஸ்ரேயாஸ் ஐயர் போன்ற ஒருவரை நம்பர் 4 அல்லது 5-ல் பயன்படுத்தலாம். சூர்யகுமார் கண்டிப்பாக அணியில் இருக்க வேண்டும்.  அவர் பேட்டிங் செய்யும் விதம் இந்திய அணிக்கு கூடுதல் பக்கபலமாக அமையும். 

shreyasiyer

இந்தியாவின் டாப்-பேட்டிங் லைன்-அப் மூலம், அவுட்-அவுட் பந்து வீச்சாளர்களைத் தேர்வு செய்ய முடியும். இந்த பேட்டிங் லைன்அப் மூலம் ஆல் ரவுண்டரை எடுக்காமல், முழு நேர பந்துவீச்சாளர்களை அணியில் எடுக்கலாம்.   ஒரு சிறந்த பேட்டிங் வரிசையுடன், முகமது சிராஜ் அல்லது அவேஷ் கான் போன்ற ஒருவருடன் செல்லலாம். ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர் அல்லது புவனேஷ்வர் குமார் போன்ற பேட் செய்யக்கூடிய ஒருவரை தேட வேண்டியதில்லை" என்று கூறினார்.  ஸ்ரீலங்கா அணிக்கு எதிரான டி20 தொடர் தற்போது முடிவடைந்த நிலையில் மார்ச் 4ம் தேதி டெஸ்ட் போட்டிகள் நடைபெற உள்ளது.   இந்தியன் பிரீமியர் லீக் தொடங்க உள்ள நிலையில் இந்திய அணி விளையாடும் கடைசி இன்டர்நேஷனல் போட்டி இது தான்.  

ஸ்ரீலங்கா தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி:
ரோஹித் சர்மா (C), மயங்க் அகர்வால், பிரியங்க் பஞ்சால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ஹனுமா விஹாரி, ஷுப்மன் கில், ரிஷப் பந்த், கே.எஸ்.பரத், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஜெயந்த் யாதவ், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஷமி, சிராஜ், உமேஷ் யாதவ், சவுரப் குமார்.

மேலும் படிக்க | தோனி, கோலியால் முடியாததை செய்து காட்டிய ரோஹித் சர்மா!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News