இது சுப்மான் கில் காலம்... தரவரிசையில் முதலிடம்; பாபர் பின்னடைவு - சிகரத்தில் சிராஜ்!

ICC Men's ODI Ranking: ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடர் நடைபெற்று வரும் சூழலில், ஆடவர் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியாகி உள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Nov 8, 2023, 05:16 PM IST
  • பேட்டிங் பந்துவீச்சு என இரண்டிலும் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
  • ஆல்ரவுண்டர் தரவரிசையில் மேக்ஸ்வெல் 4 இடங்கள் முன்னேறி உள்ளார்.
  • மூன்று அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதிபெற்றுள்ளன.
இது சுப்மான் கில் காலம்... தரவரிசையில் முதலிடம்; பாபர் பின்னடைவு - சிகரத்தில் சிராஜ்! title=

India National Cricket Team: ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி ஆடவர் உலகக் கோப்பை தொடர் (ICC World Cup 2023) தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்றுள்ள இத்தொடரின் லீக் சுற்று அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அனைத்து அணிகளும் மற்ற அணிகளுடன் தலா 1 முறை மோதி 9 லீக் ஆட்டங்களில் விளையாடும். தற்போது ஏறத்தாழ அனைத்து அணிகளும் 8 போட்டிகளில் விளையாடிவிட்டன. 

குறிப்பாக, அரையிறுதி சுற்றுக்கு இந்தியா, தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் தகுதிபெற்றுவிட்ட நிலையில், நான்காவது இடம் மட்டும் இன்னும் உறுதிசெய்யப்படாமல் உள்ளது. நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளுக்கு அதிகபட்ச வாய்ப்புள்ளது. தென்னாப்பிரிக்கா அணியை ஆப்கன் தனது கடைசி லீக் ஆட்டத்தில் பெரிய வித்தியாசத்தில் வென்றால் மட்டுமே அந்த அணிக்கு அரையிறுதி வாய்ப்பு ஏற்படும். 

முதலிடத்தில் இளவரசர் கில்

இந்த சூழலில், ஒருநாள் போட்டிகளுக்கான ஐசிசி ஆடவர் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அணி (Team India) வீரர்கள் உலகக் கோப்பை போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டுள்ள நிலையில், பேட்டிங் மற்றும் பந்துவீச்சு தரவரிசையில் இந்திய வீரர்களும் முன்னேறியுள்ளனர். பேட்டிங்கை பொறுத்தவரை (ICC Mens ODI Batting Ranking) சுப்மான் கில் முதல் முறையாக முதலிடத்திற்கு முன்னேறி உள்ளார், பாபர் அசாம் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். 

மேலும் படிக்க | உலக கோப்பை 2023: ஒரு போட்டியில் அதிக ஸ்கோர் அடித்த டாப் 5 வீரர்கள்

சோபிக்காத பாபர்

உலகக் கோப்பையில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் சுப்மான் கில் (Shubman Gill) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 92 பந்துகளுக்கு 92 ரன்களை எடுத்திருந்தார். இந்நிலையில், தற்போது 830 புள்ளிகளுடன் ஒருநாள் போட்டிகளுக்கான பேட்டிங் தரவரிசையில் சுப்மான் கில் முதலிடத்தை பிடித்துள்ளார். முதலிடத்தில் இருந்த பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் 824 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திற்கு இறங்கினார்.

விராட், ரோஹித் எந்த இடத்தில்...?

சுப்மான் கில் 26 ஒருநாள் போட்டிகளில் 1149 ரன்களை குவித்துள்ளார். பாபர் அசாம் (Babar Azam) பெரிய அளவில் இந்த உலகக் கோப்பை தொடரில் சோபிக்கவில்லை. குயின்டன் டி காக் 771 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.  பேட்டிங்கில் முதல் பத்து இடங்களில் 770 புள்ளிகளுடன் விராட் கோலி (Virat Kohli) நான்காவது இடத்திலும், ரோஹித் சர்மா (Rohit Sharma) 739 புள்ளிகளுடன் 6ஆவது இடத்திலும் உள்ளனர்.

முதலிடத்தில் சிராஜ்

பந்துவீச்சு தரவரிசையில் (ICC Mens ODI Bowling Ranking) முகமது சிராஜ் (Mohammed Siraj) முதலிடத்தில் நீடிக்கிறார். அவர் 709 புள்ளிகளுடன் யாரும் தொட முடியாத இடத்தில் உள்ளார். கேசவ் மகாராஜ் 694 புள்ளிகளுடனும், ஆடம் ஸாம்பா 662 புள்ளிகளுடனும் முறையே இரண்டாவது, மூன்றாவது இடத்தில் உள்ளனர். குல்தீப் யாதவ் 661 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், ஜஸ்பிரித் பும்ரா ஒரு இடம் இறங்கி 654 புள்ளிகளுடன் 8ஆவது இடத்திலும், முகமது ஷமி 635 புள்ளிகளுடன் 10ஆவது இடத்திலும் உள்ளனர்.

ஜம்ப் அடித்த மேக்ஸ்வெல்

ஆல்ரவுண்டர் தரவரிசையில் மேக்ஸ்வெல் (Glenn Maxwell) நான்கு இடங்கள் முன்னேறி 236 புள்ளிகளுடன் 6ஆவது இடத்தை பிடித்துள்ளார். இந்திய வீரர்களில் முதல் பத்து வீரர்களில் ஜடேஜா மட்டும் இடம்பிடித்துள்ளார். அவரும் ஒரு இடம் இறங்கி 225 புள்ளிகளுடன் 10ஆவது இடத்தை பிடித்துள்ளார். பேட்டிங், பந்துவீச்சு என இந்திய வீரர்கள் ஒருநாள் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். நடப்பு உலகக் கோப்பை தொடர் முடிவடையும் போது இந்திய வீரர்கள் பலர் இன்னும் முன்னேற்றம் அடைய வாய்ப்புள்ளது. இந்திய அணி வரும் நவ. 12ஆம் தேதி நெதர்லாந்து அணியை (IND vs NED) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சந்திக்கிறது.  

மேலும் படிக்க | கோலியின் ஆட்டத்தால் இந்திய அணி தோற்கவும் வாய்ப்பிருந்தது - கவுதம் காம்பீர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News