இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் இவரா? பிசிசிஐ கொடுத்த அப்டேட்!

டிராவிட்டிற்குப் பின் பிசிசிஐ இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக பிளெமிங் மற்றும் ரிக்கி பாண்டிங்கை நியமிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.  

Written by - RK Spark | Last Updated : May 15, 2024, 11:02 AM IST
  • ஜூன் மாதத்துடன் முடியும் டிராவிட் பதிவிக்காலம்.
  • புதிய பயிற்சியாளரை தேடி வரும் பிசிசிஐ.
  • வெளிநாட்டு பயிற்சியாளரை தேடி வருகிறது.
இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளர் இவரா? பிசிசிஐ கொடுத்த அப்டேட்! title=

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இம்முறை நேர்காணல் வடிவில் பயிற்சியாளர் தேர்வு நடைபெற உள்ளது.  2017ல் ரவி சாஸ்திரி நேரடியாக பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். காரணம் அப்போதைய இந்திய கேப்டன் விராட் கோலிக்கு, பயிற்சியாளராக இருந்த அனில் கும்ப்ளேக்கு நிறைய முரண்பாடு ஏற்பட்டது. இதன் காரணமாக ரவி சாஸ்திரி  உள்ளே வந்தார். அவருக்கு பின்பு 2021 ஆம் ஆண்டு முதல் ராகுல் டிராவிட் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்து வருகிறார். இவரை பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நியமித்தார்.

மேலும் படிக்க | IPL 2024: பவர்பிளே ஓவர்களில் அதிக விக்கெட்டுகளை பறிகொடுத்த பரிதாபமான அணி எது தெரியுமா?

ராகுல் ட்ராவிட்டிற்கு விருப்பம் இல்லாத போதிலும் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்கும்படி சமாதானப்படுத்தினார் என்றே சொல்லலாம். இந்நிலையில், வரும் ஜூன் மாதத்துடன் ராகுல் டிராவிட் பதவிக்காலம் முடியவுள்ள நிலையில் டிராவிட் மீண்டும் பயிற்சியாளராக தொடர விரும்பவில்லை. அவருக்கு அடுத்தபடியாக தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் விவிஎஸ் லட்சுமணன் இந்த பதவியை ஏற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரும் முன்வரவில்லை. மேலும், என்சிஏ அமைப்பைத் தொந்தரவு செய்ய பிசிசிஐ அதிக ஆர்வம் காட்டவில்லை.

இந்நிலையில், இரண்டு அனுபவம் வாய்ந்த வெளிநாட்டு பயிற்சியாளர்களை நியமிக்க பிசிசிஐ யோசனை செய்து வருகிது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் ஆகியோரை பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ முயற்சி செய்து வருவதாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அவர்கள் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் தற்போது வரை வரவில்லை. இருவரும் நீண்ட காலமாக ஐபிஎல் தொடரில் ஒரு அங்கமாக இருந்து வருகின்றனர். இவர்கள் இருவருக்கும் இந்திய கிரிக்கெட்டை பற்றி நன்கு தெரியும். 

கடந்த 20 ஆண்டுகளில் இந்திய அணி இரண்டு வெளிநாட்டு பயிற்சியாளர்களை கொண்டு இருந்தது. ஜான் ரைட் மற்றும் கேரி கிர்ஸ்டன் ஆகியோர் தலைமையில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டது. ஜான் ரைட்டின் கீழ் இந்திய அணி இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடர்களை சமன் செய்து, மேலும் 2003 உலகக் கோப்பை இறுதிப் போட்டியை எட்டியது. பாகிஸ்தானில் இந்திய அணி தனது முதல் டெஸ்ட் தொடரை வென்றது. கேரி கிர்ஸ்டன் தலைமையில் இந்தியா 2011 உலகக் கோப்பையை வென்றது. அதன் பிறகு பிசிசிஐ இந்திய பயிற்சியாளர்களை மட்டுமே நியமித்து வந்தது.

புதிய பயிற்சியாளரின் பதவிக்காலம் ஜூலை 1, 2024 முதல் டிசம்பர் 31, 2027 வரை இருக்கும். ஆஸ்திரேலியாவில் நடக்கும் டெஸ்ட் தொடர், அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடக்கும் சாம்பியன்ஸ் டிராபியை போன்ற முக்கிய போட்டிகள் அடுத்தடுத்து இருப்பதால் புதிய பயிற்சியாளருக்கு சவாலானதாக இருக்கும். பிசிசிஐ ஆலோசனைக் குழு வெளிநாட்டுப் பயிற்சியாளரைத் தேர்ந்தெடுத்தால், அதில் நான் தலையிட முடியாது என்று பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா கடந்த வாரம் தெரிவித்து இருந்தார். இதனால், தற்போதைய நிலவரப்படி இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளர் வெளிநாட்டவராக இருப்பதற்கான அதிக வாய்ப்பு உள்ளன. விண்ணப்பங்களை சமர்ப்பிக்க மே 27 கடைசி நாளாகும்.

மேலும் படிக்க | ஐபிஎல்லில் இருந்து வெளியேறியுள்ள வீரர்கள்! எந்த எந்த அணிகளுக்கு பாதிப்பு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News