IPL தொடர்களில் மேலும் ஒரு சாதனையை படைத்துள்ளார் சன் ரைசர்ஸ் அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர்!
IPL 2019 தொடரில் 8 போட்டிகளில் மட்டுமே விளையாடி 400 ரன்களுக்கு மேல் குவித்து ஆரஞ்ச் தொப்பி பெற்ற வீர்ர என்னும் பெருமையினை சென்னை எதிரான ஆட்டத்தில் பெற்றுள்ளார். முன்னதாக IPL தொடர்களில் சன் ரைசர்ஸ் அணிகாக விளையாடும் வீரர்களில் முதலாவதாக 3000 ரன்கள் குவித்த வீரர் என்னும் பெருமையினை டேவிர் வார்னர் பெற்றது குறிப்பிடத்தக்கது.
IPL 2019 தொடரின் 33-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின. இப்போட்டியில் ஐதராபாத் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஐதராபாத் அணியின் வெற்றிக்கு பெரிதும் உதவிய அணியின் துவக்க வீரர் டேவிட் வார்னர் இன்றைய போட்டியில் 24 பந்துகளில் 50 ரன்கள் குவித்து சாதனை படைத்தார். முன்னதாக 26 பந்துகளில் 50 ரனகள் குவித்த தனது சாதனையை இன்றைய சாதனையின் மூலம் வார்னர் முறியடித்துள்ளார்.
தற்போதைய தொடரின் 8 போட்டிகளில் விளையாடியுள்ள டேவிட் வார்னர் இதுவரை ஐந்து முறை அரை சதம், ஒரு முறை சதம் அடித்துள்ளார். அதேப்போல் அதிக நான்கு(44) அடித்தவர் என்னும் பெருமையினையும் பெற்றுள்ளார்.
IPL தொடரில் ஒட்டுமொத்தமாக 4464 ரன்கள் குவித்துள்ள டேவிட் வார்னர் ‘அதிக ரன் குவித்த வீரர்’ என்னும் பட்டியலில் தற்போது 4-ஆம் இடத்தில் உள்ளார். முதல் இடத்தில் விராட் கோலி 5226 ரன்கள் குவித்து முதலிடத்தில் உள்ளார். சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வீரர்களில் முதலிடத்தில் இருப்பவர் டேவிர் வார்னரே., இவரைத் தொடர்ந்து யூசப் பதான் 3196, மனீஷ் பாண்டே 2553 ரன்கள் குவித்துள்ளனர்.