இன்றைய ஐபிஎல் போட்டிகளில் முக்கியமான நான்கு அணிகளுக்கு இடையே போட்டி நடக்க உள்ளது. இதனால் இன்றைய போட்டியின் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் அதிகமாக உள்ளது. இன்று வார இறுதி நாள் என்பதால் இரண்டு போட்டிகள் நடக்க உள்ளன. பகல் 3.30 மணிக்கு நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், இரவு 7.30க்கு ஆசிபி vs மும்பை அணிகள் மோதவுள்ளன.
சிஎஸ்கே அணி 9 போட்டிகளில் விளையாடி 7 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. சிஎஸ்கே அணியைப் பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பவுலின் என இரண்டிலும் பலமாக உள்ளது. ஐபிஎல் 2021 இரண்டாம் பகுதியில் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் எதிரணியினரை கலங்கடித்தது. கொல்கத்தா அணி கடைசியாக மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தில் மிகச்சிறப்பாக ஆடி வெற்றி பெற்றது. ஐயர் மற்றும் திரிபாதி நல்ல பார்மில் உள்ளனர். கேகேஆர் அணியின் பந்துவீச்சும் மிகவும் பலமாக உள்ளது. இரண்டு பலம் வாய்ந்த அணிகள் இன்று மோத உள்ளதால் இந்த போட்டி மிகவும் எதிர்பார்ப்பில் அமைந்துள்ளது.
மாலை 7.30க்கு நடைபெறும் போட்டியில் கோலியின் ஆர்பி அணியும், ரோஹித் ஷர்மாவின் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதவுள்ளன. மும்பை அணி கடைசியாக ஆடிய இரண்டு போட்டிகளிலும் பரிதாபமாக தோல்வி அடைந்தது. இதனால் புள்ளி பட்டியலில் 6வது இடத்துக்கு தள்ளப்பட்டது. ஆர்சிபி அணியும் கடைசி இரண்டு போட்டியில் தோல்வியடைந்து உள்ளது. இதனால் இந்த இரு அணிகளும் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். மேலும் இந்திய அணி t20 கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக கோலி அறிவித்ததை அடுத்து, அடுத்த கேப்டனாக ரோஹித் சர்மா தேர்ந்தெடுக்கப்படலாம் என்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
இன்றைய போட்டி ஆர்சிபி மற்றும் மும்பை அணிகள் இடையே நடந்தாலும், கோலி மற்றும் ரோஹித் சர்மாவுக்கும் இடையே நடக்கும் போட்டியாகவே பார்க்கப்படுகின்றது. இருதரப்பு ரசிகர்களும் நேற்றிலிருந்தே தங்களின் சண்டைகளை சமூக வலைதளங்களில் ஆரம்பித்துவிட்டனர். ஐபிஎல் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் மும்பை அணி தற்போது தோல்வியடைந்து வருகிறது. இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் தொடர்ந்து வெற்றி பெற்ற ஆர்சிபி அணி துபாயில் தோல்வியடைந்து வருகிறது.
ALSO READ மீண்டும் முதல் இடம் பிடித்த டெல்லி! ராஜஸ்தானிடம் எளிதான வெற்றி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR