INDvsAUS: இந்திய அணிக்கு தலைவலி கொடுக்கும் டாட் மர்பி...! யார்?

நாக்பூர் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் டாட் மர்பி.  

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 10, 2023, 02:36 PM IST
 INDvsAUS: இந்திய அணிக்கு தலைவலி கொடுக்கும் டாட் மர்பி...! யார்? title=

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட ஆலன் பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான டெஸ்ட் தொடரின் முதல் போட்டி நாக்பூரில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலியா 177 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்திருந்தது. களத்தில் இருந்த ரோகித் சர்மா மற்றும் அஸ்வின் ஆகியோர் இந்திய அணியின் 2ம் நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர். முதல் நாளில் ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர்களை சிறப்பாக எதிர்கொண்ட இந்திய அணியினர் 2ம் நாளில் தடுமாறினர்.

டாட் மர்பி அபாரம்

குறிப்பாக, ஆஸ்திரேலிய அணியின் இளம் சுழற்பந்துவீச்சாளர் டாட் மர்பியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். நாதன் லையன் இந்திய அணிக்கு பெரும் அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்டபோதும், அவரது பந்துகளை இந்திய அணியினர் அசால்டாக எதிர்கொண்டனர். ஆனால், டாட் மர்பி பந்துவீச்சில் அடுத்தடுத்து முக்கிய வீரர்கள் தங்களது விக்கெட்டை பறிகொடுத்து வெளியேறினர்.

மேலும் படிக்க | IND Vs AUS 1st Test: ஜடேஜா - அஸ்வின் மாயாஜால சுழலில் சுருண்ட ஆஸ்திரேலியா..! ரோகித் அரைசதம்

4 விக்கெட்டுகள் 

நேற்று ராகுல் விக்கெட்டை வீழ்த்தியிருந்த டாட் மர்பி, இன்று நாள் தொடங்கியவுடன் அஸ்வினை அவுட்டாக்கி வெளியேற்றினார். அடுத்து வந்த புஜாராவையும் விக்கெட் எடுத்த டாட் மர்பி, விராட் கோலியின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார். அவருடைய தொடர் வேட்டைக்குப் பிறகு நாதன் லையனும் விக்கெட் எடுக்க தொடங்கினார். அறிமுக டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் விக்கெட்டை வீழ்த்தி அவரை பெவிலியனுக்கு அனுப்பினார். மர்பியை பொறுத்தவரைக்கும் இதுவரை 7 முதல் தர போட்டிகளில் மட்டுமே விளையாடி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. புதிய பந்துவீச்சாளர் என்பதால் அவருடைய பந்துகளை கணித்து ஆடுவதில் இந்திய அணியினருக்கு பெரும் சிரமமாக இருக்கிறது.

மேலும் படிக்க | IND vs AUS: ரவீந்திர ஜடேஜா பந்தை சேதப்படுத்தினாரா? உண்மை வெளியானது!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News