அக்தர், பிரெட் லீ போன்றவர் உம்ரான் மாலிக் - கம்ரான் அக்மல் கருத்து

அக்தர், பிரெட் லீ போன்றவர் உம்ரான் மாலிக் என பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : May 15, 2022, 06:00 PM IST
  • உம்ரான் மாலிக்கை புகழ்ந்த கம்ரான் அக்மல்
  • 157 கிமீ வேகம் வீசி மாலிக் சாதனை
அக்தர், பிரெட் லீ போன்றவர் உம்ரான் மாலிக் - கம்ரான் அக்மல் கருத்து title=

நடப்பு ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிவருபவர் உம்ரான் மாலிக். 157 கி.மீ வேகத்தில் வீசி அதிவேக பந்துவீச்சுக்கு சொந்தக்காரர் என்ற பெருமையை அவர் பெற்றிருக்கிறார்.

அதேசமயம் எவ்வளவுக்கு எவ்வளவு வேகமாக போடுகிறாரோ அதே அளவு ரன்களையும் அவர் விட்டுக்கொடுக்கிறார் என சிலர் கூற, இந்தியாவில் இப்படி ஒரு வேகப்பந்துவீச்சாளர் கிடைப்பதே அரிது எனவே அவரை முறையாக பயிற்றுவித்து தேசிய அணிக்கு எடுக்க வேண்டுமென சிலர் கோரிக்கை வைக்கின்றனர்.

Umran Malik

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் உம்ரான் மாலிக் குறித்து பேசுகையில், “உம்ரான் மாலிக் பாகிஸ்தானில் இருந்திருந்தால், இந்நேரம் தேசிய அணியில் இடம்பெற்றிருந்திருப்பார். அவர் ரன் கொடுக்கும் விகிதம் அதிகமாகத்தான் இருக்கிறது.

இருந்தாலும் அவருக்கு வேகமும், விக்கெட் எடுக்கும் சதவீதமும் அதிகமாக இருக்கிறது. வேகப்பந்துவீச்சாளர்கள் அப்படிதான் பந்து வீசுவார்கள். ஆஸ்திரேலிய வீரர் பிரெட் லீ அதுபோலதான் இருந்தார். சோயப் அக்தரும் அவரைப்போலதான் இருந்தார்.

மேலும் படிக்க | RIP Symonds: ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர் ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் நினைவஞ்சலி

இந்த ஆண்டு நடைபெறும் டி20 உலக்கோப்பையில் ஆஸ்திரேலிய மைதானங்களுக்கு வேகப்பந்துவீச்சு நிச்சயம் தேவை” என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News