கோலி வாய்ப்பு கொடுக்கவில்லை - ரோகித்ஷர்மா வாய்ப்பு கொடுப்பாரா? எதிர்பார்க்கும் வீரர்

விராட்கோலி கேப்டனாக இருக்கும்போது வாய்ப்பு கிடைகமால் இருந்த வீரர், ரோகித் கேப்டன்சியில் வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளார். 

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 12, 2022, 11:32 AM IST
  • இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி
  • வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் வீரர்கள்
  • ரோகித் சர்மா எடுத்திருக்கும் முடிவு என்ன?
கோலி வாய்ப்பு கொடுக்கவில்லை - ரோகித்ஷர்மா வாய்ப்பு கொடுப்பாரா? எதிர்பார்க்கும் வீரர் title=

இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் நடைபெறுகிறது. இப்போட்டி பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடைபெற இருப்பதால் பிற்பகலில் தொடங்க உள்ளது. விராட் கோலி கேப்டனாக இருக்கும்போது போதிய போட்டிகளில் விளையாடாத வீரர் ரோகித் சர்மா கேப்டன்ஷியில் தனக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளார். 

யார் அந்த வீரர்? 

இந்திய அணியில் இடம்பிடித்திருக்கும் கே.எஸ்.பரத், இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தனக்கு வாய்பளிக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் உள்ளார். ஏனென்றால், இலங்கை அணியை முதல் போட்டியில் மிகப்பெரிய ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியுள்ளது. இதனால், இப்போட்டியில் கடந்த போட்டியில் களமிறக்கப்படாத சில வீரர்களுக்கு வாய்ப்பளிக்க கேப்டன் ரோகித் சர்மா முடிவெடுத்துள்ளார். அந்தப் பட்டியலில் தனக்கும் இடம் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் உள்ளார் கே.எஸ்.பரத்.  

இந்த வீரர்களை நீக்க ரோகித் முடிவு - காரணம் இதுதான்

ஐபிஎல் போட்டி

கே.எஸ்.பரத் விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன். பெங்களூரு அணிக்காக விளையாடிய அவர், பல போட்டிகளில் அதிரடியாக விளையாடி ஆட்டத்தின் போக்கையே மாற்றினார். இதனால், அனைவரது கவனத்தையும் ஈர்த்த அவருக்கு இந்திய அணியில் இடம்பிடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், களத்தில் இறங்கும் வாய்ப்பு கிடைக்காமல், பெஞ்சிலேயே அமரவைக்கப்படுகிறார். இலங்கை அணி பலவீனமாக இருப்பதால், இந்த நேரத்தில் தன்னை பயன்படுத்திக் கொள்ளலாமே? என்ற எண்ணத்தில் கே.எஸ்.பரத் இருக்கிறார். 

உள்ளூர் போட்டி

விஜய் ஹசாரோ உள்ளிட்ட உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் மிகச்சிறப்பான பங்களிப்பை கொடுத்திருக்கிறார் கே.எஸ்.பரத். குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 156 ரன்கள் விளாசிய கே.எஸ்.பரத், ஹிமாச்சலப் பிரதேச அணிக்கு எதிரான போட்டியில் 161 ரன்கள் விளாசினார். மிக நீண்ட தூரம் சிக்ஸ் அடிக்கும் அசாத்திய திறமை கொண்டவராகவும் உள்ளார். 

மேலும் படிக்க | ரோகித் ஷர்மாவிற்கு முத்தம் கொடுத்த ரசிகர், வைரலாகும் Video!

நியூசிலாந்துக்கு எதிரான வாய்ப்பு

கே.எஸ்.பரத்துக்கு நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் அணியில் சேர்க்கப்பட்டாலும் பிளேயிங் லெவனில் களமிறங்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால், சஹா காயமடைந்து பாதியில் களத்தை விட்டு வெளியேறியபோது விக்கெட் கீப்பிங் செய்யும் வாய்ப்பு பரத்துக்கு கிடைத்தது. அப்போது, கண் இமைக்கும் நேரத்தில் ஸ்டம்பிங் செய்து அசத்தினார். இந்த ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி வரை 2 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளது.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News