இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி, பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகளில் சிறப்பான சாதனை படைத்துள்ளார். ஐந்து போட்டிகளில் விளையாடிய அவர், மொத்தம் 426 ரன்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் இரண்டு அரை சதங்கள் அடங்கும். கோலியின் பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகளில் சராசரி 42.60 ஆகும். அவரது அதிகபட்ச ஸ்கோர் 169 ஆகும். கோலி பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகளில் இரண்டு வெற்றிகளையும் பெற்றுள்ளார். இதனால் தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான செஞ்சூரியனில் இன்று தொடங்கும் முதல் டெஸ்ட் போட்டியிலும் இதே மாதிரியான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | 'நான் ரெடிதான் வரவா...' டி20 உலகக் கோப்பை தொடர் - ரோஹித் சர்மாவின் அப்டேட்!
கோலியின் பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகள்
- 2011 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்சில் 11 ரன்களுக்கும், இரண்டாவது இன்னிங்சில் கணக்கை திறக்காமல் வெளியேறினார்.
- 2013 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்சில் 46 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 11 ரன்களும் எடுத்தார்.
- 2014 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்சில் 169 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 54 ரன்களும் எடுத்தார்.
- 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்சில் 82 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் பூஜ்ஜிய ரன்களும் எடுத்தார்.
- 2023 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் முதல் இன்னிங்சில் 35 ரன்களும், இரண்டாவது இன்னிங்சில் 18 ரன்களும் எடுத்தார்.
தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான நடைபெறும் இந்த பாக்சிங் டே டெஸ்ட் போட்டியிலும் இதேபோன்றதொரு ஆட்டத்தை கோலி வெளிப்படுத்துவார் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.
கோலியின் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி சாதனைகள்
விராட் கோலி பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகளில் 10 இன்னிங்ஸில் 42.60 சராசரியுடன் 426 ரன்கள் எடுத்துள்ளார். அவரது அதிகபட்ச ஸ்கோர் 169 ஆகும். பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகளில் கோலி விளையாடியதில் இரண்டு முறை இந்திய அணி வெற்றி பெற்றிருக்கிறது. மேலும், பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகளில் 126 பவுண்டரிகள் மற்றும் 18 சிக்சர்கள் விராட் கோலி அடித்துள்ளார். பாக்சிங் டே டெஸ்ட் போட்டிகளில் தனது சிறந்த ஸ்கோர் 169 ரன்களை, 2014 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் எடுத்தார். அவருடைய இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் 82. அதுவும் 2018 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான அடிக்கப்பட்டது தான்.
பாக்சிங் டே டெஸ்ட் என்றால் என்ன?
கிறிஸ்துமஸ் விழாவுக்கு அடுத்தநாள் பாக்சிங் டேவாக கடைபிடிக்கப்படுகிறது. அந்த நாளில் நடைபெறும் கிரிக்கெட் போட்டி பாக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டி என கூறப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை இந்த பாக்சிங் டே டெஸ்ட் போட்டியை ஆஸ்திரேலியா அல்லது தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு எதிராக ஒவ்வொரு ஆண்டும் விளையாடும்.
மேலும் படிக்க | Cricket Controversies 2023: இந்த ஆண்டில் கிரிக்கெட் களத்தில் நடைபெற்ற சர்ச்சைகள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ