ஆவேஸ்கான் பந்துவீச்சில் தென்னாப்பிரிக்க வீரரின் பேட் உடைந்தது - வீடியோ

ஆவேசமாக பந்துவீசிய ஆவேஷ்கானின் பந்துவீச்சில் தென்னாப்பிரிக்கா வீரரின் பேட் உடைந்தது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Jun 10, 2022, 02:47 PM IST
  • ஆவேசமாக பந்துவீசிய ஆவேஷ்கான்
  • தென்னாப்பிரிக்க வீரரின் பேட் உடைந்தது
  • இணையத்தில் பரவும் வீடியோ
ஆவேஸ்கான் பந்துவீச்சில் தென்னாப்பிரிக்க வீரரின் பேட் உடைந்தது - வீடியோ  title=

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் ஆவேசமாக பந்துவீசிய வேகப்பந்துவீச்சாளர் ஆவேஷ்கானின் பந்துவீச்சில் வாண்டர்டெசனின் பேட் உடைந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. டெல்லியில் இருக்கும் அருண்ஜெட்லி மைதானத்தில் இந்தியா - தென்னாப்பிரிக்கா அணியின் முதல் 20 ஓவர் போட்டி நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 211 ரன்கள் குவித்தது.

மேலும் படிக்க | Ambani vs Amazon: ஐபிஎல் மீடியா உரிமையை கைப்பற்றப்போவது யார்?

தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய இஷான் கிஷன் 76 ரன்கள் குவித்து அசத்தினார். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக களமிறங்கிய அவர், எதிர்பார்த்த அளவுக்கு ஜொலிக்கவில்லை. சுமார் 15 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்ட அவர், ஒரு போட்டியில் கூட சிறப்பாக ஆடாதது மும்பை அணிக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. அதனால், இந்திய அணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவாரா? என்ற கேள்வி இருந்தபோது, தேர்வாளர்கள் தென்னாப்பிரிக்கா தொடருக்கு இஷான் கிஷனை தேர்ந்தெடுத்தனர்.

இதுதொடர்பாக விமர்சனங்கள் எழுந்தபோதும், நேற்றையபோட்டியில் சிறப்பாக ஆடி, அந்த விமர்சனங்களுக்கு பதில் கொடுத்தார். அவருடைய ஆட்டம் சிறப்பாக இருந்தபோதும், பந்துவீச்சில் இந்திய அணி கோட்டைவிட்டது. 211 ரன்கள் என்ற இலக்கை தென்னாப்பிரிக்கா அணி 3 விக்கெட் மட்டுமே இழந்து எட்டியது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசிய வீரர்கள் இந்தப் போட்டியில் சிறப்பாக பந்துவீசவில்லை. இதுவே இந்திய அணியின் தோல்விக்கு காரணமாகவும் அமைந்தது. ஆவேஸ்கான் 4 ஓவர்களில் 35 ரன்கள் விட்டுக் கொடுத்தார். ஆனால், அவருடைய ஓவரில் ஒரு சுவாரஸ்ய சம்பவம் நடைபெற்றது. சிறப்பாக ஆடிய தென்னாப்பிரிக்க வீரர் வாண்டர் டெசனின் பேட்டை உடைத்தார்.

மேலும் படிக்க | ஐபிஎல் போட்டிகளை அதிகரிக்க பிசிசிஐ முடிவு! புதிய விதிகள் அமல்!

14வது ஓவரை ஆவேஸ்கான் வீசும்போது அவருடைய பந்துவீச்சை வாண்டர் டெசன் எதிர்கொண்டார். அந்த ஓவரில் 140 கி.மீ வேகத்தில் வீசப்பட்ட பந்தை எதிர் கொண்டபோது, வாண்டர்டெசனின் பேட் உடைந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. அதேநேரத்தில் ஆவேஷ்கான் ஒரு விக்கெட் கூட எடுக்கவில்லை. 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News