‘விராட் கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன்’ மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான் ஷிவ்நரைன் சந்தர்பால்

ஸ்போர்ட்ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் பேசிய முன்னால் கிரிக்கெட் வீரர் சந்தர்பால், விராட் கோஹ்லியை உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக தேர்வு செய்தார். அவர் தனது விளையாட்டின் அனைத்து அம்சங்களிலும் நன்றாக பணியாற்றி வருகிறார்.

Shiva Murugesan சிவா முருகேசன் | Updated: Mar 23, 2020, 06:19 AM IST
‘விராட் கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன்’ மேற்கிந்திய தீவுகள் ஜாம்பவான் ஷிவ்நரைன் சந்தர்பால்
Photo: Zee Media Network

புது டெல்லி: இந்த மாதம் இந்தியாவில் நடந்த சாலை பாதுகாப்பு உலகத் தொடர் 2020 (Road Safety World Series 2020) போட்டிகளில் கலந்து கொண்ட மேற்கிந்திய தீவுகள் அணியின் ஜாம்பவான் ஷிவ்நாரைன் சந்தர்பால் (Shivnarine Chanderpaul), இந்திய கேப்டன் (India captain) விராட் கோலிக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார். 

ஸ்போர்ட் ஸ்டாருக்கு அளித்த பேட்டியில் பேசிய சந்தர்பால், உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக விராட் கோஹ்லி (Virat Kohli) திகழ்கிறார். அதுதான் உண்மை. அவர் தனது விளையாட்டின் அனைத்து அம்சங்களிலும் நன்றாக ஆடி வருகிறார். மேலும் அற`அவரது சாதனைகளே அதற்கு சான்று என்று அவர் கூறினார்.

அவர் தனது உடற்தகுதிக்கு கடுமையாக உழைத்து வருகிறார். அவர் கடின உழைப்பில் ஈடுபடுவதை நீங்கள் காண்கிறீர்கள். அவர் தனது திறமையை நன்றாக பயன்படுத்துகிறார். எப்போதும் நன்றாக விளையாட விரும்பும் நபர்களில் அவரும் ஒருவர். அவர் அதை நிரூபித்துள்ளார். சொந்த மண்ணில் மட்டுமில்லை, வெளிநாட்டு தொடர்களிலும் நன்றாக ஆடி வருகிறார் என்று விராட் கோலிக்கு (Virat Kohli) புகழாரம் சூட்டினார்.

இதற்கிடையில், பாகிஸ்தான் ஜாம்பவான் ஜாவேத் மியாந்தாத்தும் (Javed Miandad) இந்த வார தொடக்கத்தில் ஒரு யூடியூப் வீடியோவில் இந்திய கேப்டனை பாராட்டியிருந்தார் குறிப்பிடத்தக்கது.