ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019, இங்கிலாந்தில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் 42-வது லீக் ஆட்டம் லீட்ஸ் மைதானத்தில் இன்று நடைப்பெற்றது. இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங்க் தேர்வு செய்து விளையாடியது.
முதலில் பேட்டிங்க் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்தது. அணியில் அதிகபட்சமாக ஷாய் ஹோப் 77(92) ரன்கள் குவித்தார். இவருக்கு துணையாக இவின் லிவிஸ் 58(78), நிக்கோலஸ் பூரன் 58(43) ரன்கள் குவித்தனர். ஆப்கான் வீரர் டாவ்லட் ஜாட்ரன் 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து 312 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் வீரர்கள் களமிறங்கினர். துவக்க வீரராக களமிறங்கிய நபி 5(6) ரன்களில் வெளியேறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இவரை தொடர்ந்து வந்த ரஹமத் ஷா 62(78), இக்ரம் அலி கில் 86(93) ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தனர். எனினும் இவர்களை தொடர்ந்து வந்து வீரர்கள் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வெளியேற ஆட்டத்தின் இறுதி பந்தில் ஆப்கான் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆட்ட நேர முடிவில் 288 ரன்கள் மட்டுமே குவித்த ஆப்கானிஸ்தான் 23 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
West Indies finish their #CWC19 campaign on a high!
They beat Afghanistan by 23 runs.#AFGvWI | #CWC19 | #MenInMaroon pic.twitter.com/iXJid59K9C
— Cricket World Cup (@cricketworldcup) July 4, 2019
இப்போட்டியில் பெற்ற ஆறுதல் வெற்றி மூலம் 5 புள்ளிகளுடன் மேற்கிந்திய தீவுகள் அணி உலக கோப்பை தொடரில் இருந்து வெளியேறியது. அதோப்போல் ஒரு போட்டியிலும் வெற்றிபெறாத ஆப்கானிஸ்தான் அணி புள்ளிகள் ஏதும் இன்றி தொடரில் இருந்து வெளியேறியது.