விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரில் சிறந்தவர் யார்? சச்சின் டெண்டுல்கரின் கிளாசிக் பதில்

இரு பேட்ஸ்மேன்களும் விளையாடுவதைப் பார்ப்பது ஒரு இனிமையான அனுபவம். ஆனால் அவர்களை ஒப்பிட்டுப் பார்க்க விரும்பவில்லை என உலக புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

Written by - Shiva Murugesan | Last Updated : Feb 7, 2020, 05:10 PM IST
விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரில் சிறந்தவர் யார்? சச்சின் டெண்டுல்கரின் கிளாசிக் பதில் title=

சிட்னி: சிறந்த பேட்ஸ்மேன் யார்? ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் அல்லது இந்தியாவின் விராட் கோலி? இது கிரிக்கெட்டில் ஒருபோதும் முடிவடையாத விவாதம். பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஸ்மித்தை விட கோஹ்லி தான் அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் சிறந்த பேட்ஸ்மேனாக தேர்வு செய்திருந்தாலும், டெஸ்ட் கிரிக்கெட் என்று பார்த்தால் கோஹ்லியை பின்னுக்கு தள்ளி ஸ்மித் தான் முன்னணியில் உள்ளார். இருவரில் சிறந்தவர் யார்? என்ற கேள்வியை உலக புகழ்பெற்ற இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கரிடம் கேட்டபோது, நவீன கால பெரியவர்களான விராட் கோஹ்லி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோருக்கு இடையில் ஒப்பிட்டுப் பார்க்க மறுத்துவிட்டார்.

சச்சின் டெண்டுல்கர், "விராட் கோலி மற்றும் ஸ்டீவ் ஸ்மித்தின் இருவரின் பேட்டிங் பாணியை விரும்புகிறார். ஆனால் இந்த இரண்டு பேட்ஸ்மேன்களுக்கும் இடையிலான ஒப்பீடு அவருக்கு பிடிக்கவில்லை. இரு பேட்ஸ்மேன்களும் விளையாடுவதைப் பார்ப்பது ஒரு இனிமையான அனுபவம். ஆனால் அவர்களை ஒப்பிட்டுப் பார்க்க விரும்பவில்லை. அவர்கள் முழு கிரிக்கெட் உலகத்தையும் மகிழ்விக்கிறார்கள். இது எங்களுக்கு ஒரு மகிழ்ச்சி" என்று சச்சின் கூறினார். 

புஷ்ஃபயர் கிரிக்கெட் பாஷிற்காக ஆஸ்திரேலியா வந்த சச்சின், ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மார்னஸ் லாபூஷேன் ஒரு சிறந்த திறமைசாலி என்றும் வர்ணித்தார். மார்னஸின் அடிச்சுவடு மிகச்சிறப்பானது, அவர் ஒரு சிறந்த வீரர் என்றார்.

சச்சின் கூறுகையில், “இங்கிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் லார்ட்ஸ் மைதானத்தில் மார்னஸ் விளையாடுவதை நான் கண்டேன். ஸ்மித் காயமடைந்தபோது அவரது இடத்தில் விளையாடினார். அவர் ஒரு சிறந்த பேட்ஸ்மேன். அவரது அடிச்சுவடு சூப்பர். அடிச்சுவடு என்பது உடல் ரீதியான விஷயம் அல்ல. இது உங்கள் மனநிலையுடன் தொடர்புடையது. நீங்கள் நேர்மறையான சிந்தனையுடன் விளையாடவில்லை என்றால், கால்களின் இயக்கம் உங்களைப் பாதிக்கிறது.' என்றும் சச்சின் டெண்டுல்கர் கூறினார்.

உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.

Trending News