டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானிடம் ஏன் வீழ்ந்தோம் -மௌனம் கலைத்த ரவி சாஸ்திரி

பயோ-பப்பில் இருப்பதால் இந்திய வீரர்கள் மனதளவிலும், உடலளவிலும் சோர்வடைந்துள்ளதாகவும், ஐபிஎல் மற்றும் டி20 உலகக் கோப்பைக்கு இடையே கிடைத்த சிறிய இடைவெளி வீரர்களுக்கு உதவவில்லை -ரவி சாஸ்திரி

Written by - Shiva Murugesan | Last Updated : Dec 24, 2021, 02:22 PM IST
டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தானிடம் ஏன் வீழ்ந்தோம் -மௌனம் கலைத்த ரவி சாஸ்திரி title=

புது தில்லி: இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி (Ravi Shastri), டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் வின் மோசமான ஆட்டம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிரான தோல்வி குறித்து மவுனம் கலைத்துள்ளார். இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை (T20 World Cup) தொடரில் இந்திய அணி முதலில் பாகிஸ்தானிடமும், பின்னர் நியூசிலாந்திடமும் தோல்வியடைந்தது. இதன் காரணமாக இந்திய அணி நாக் அவுட் சுற்றுக்கு செல்ல முடியவில்லை. இந்தியாவை பாகிஸ்தான் 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. உலகக் கோப்பை வரலாற்றில் முதல் முறையாக பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடைந்தது.

தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய  ரவி சாஸ்திரி (Ravi Shastri), உலகக் கோப்பையில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்தது குறித்து பேசுகையில், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி என்பதால் வித்தியாசமாக களத்தில் இறங்க மாட்டார்கள். அனைத்து போட்டிகள் போலவே, அவர்களுக்கு எதிரான போட்டியிலும் களம் இறங்கினோம் என்று கூறினார். கடந்த 20 ஆண்டுகளின் முடிவுகளைப் பார்க்கும்போது, ​​90 சதவீதத்துக்கும் அதிகமான போட்டிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளோம். எனவே எந்த நாளும் எதுவும் நடக்கலாம், அதற்காக ஒன்றிரண்டு தோல்விகள் எதையும் மாற்றும்.

ஐ.பி.எல். தொடரும் ஒரு காரணம்:
முன்னதாக, விராட் கோலி (Virat Kohli) மற்றும் மற்ற இந்திய வீரர்கள் சுமார் 6 மாதங்கள் பயோ செக்யூர் குமிழியில் இருந்ததால் மனரீதியாகவும் உடல் ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்ததாக சாஸ்திரி கூறியிருந்தார். பயோ-பப்பில் இருப்பதால் இந்திய வீரர்கள் மனதளவிலும், உடலளவிலும் சோர்வடைந்துள்ளதாகவும், ஐபிஎல் மற்றும் டி20 உலகக் கோப்பைக்கு இடையே கிடைத்த சிறிய இடைவெளி வீரர்களுக்கு உதவவில்லை என்றும் சாஸ்திரி கூறியிருந்தார்.

ALSO READ |  விராட் கோலிக்கு ஆதரவாக களமிறங்கிய சஞ்சய் மஞ்ச்ரேக்கர், கங்குலி மீது பாய்ச்சல்

தோனியை விட கூர்மையான அறிவு யாருக்கும் இல்லை:
டி20 உலகக் கோப்பையில், இந்திய அணியின் வழிகாட்டியாக எம்எஸ் தோனி (MS Dhoni) நியமிக்கப்பட்டார். தோனியை ஆலோசகராக ஆக்கியபோது, ​​தோனியின் பெயர் வழிகாட்டியாக அறிவிக்கப்பட்டபோது, ​​அது என்னை எந்தவிதத்திலும் பாதிக்கவில்லை என்று ரவி சாஸ்திரி கூறினார். ஒயிட் பால் கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, தோனியை விட கூர்மையான அறிவு மற்றும் அனுபவம் வேறு யாருக்கும் இல்லை. நான் அவரை பக்கத்தில் இருந்து பார்த்தவன். விளையாட்டின் நன்மைக்காக நிர்வாகம் ஏதாவது செய்தால், ஏன் செய்யக்கூடாது? என தோனி நியமிக்கப்பட்டது குறித்து பேசினார்.

ஹர்திக் பாண்டியா சீக்கிரம் திரும்ப வேண்டும்:
காயம் காரணமாக ஹர்திக் பாண்டியா அணியில் இருந்து வெளியேறியது குறித்து, சாஸ்திரி கூறுகையில், பாண்டியா கொஞ்சம் நாட்கள் ஓய்வு எடுத்து அவரது உடற்தகுதியை மேம்படுத்தினால் அது அணிக்கு பயனுள்ளதாக இருக்கும், மேலும் டி20 கிரிக்கெட்டில் அவருக்கு 4 ஓவர்கள் கொடுக்க முடியும் என்றார்.

ALSO READ |  "நேருக்கு நேர் பேசுங்கள்" - ஷாகித் அப்ரிடி கருத்து!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News