YUVI 40: யுவராஜின் 12-ம் நம்பர் ரகசியம்.!! சுவாரஸ்ய பின்னணி

கிரிக்கெட் பிளேயராக தெரிந்த யுவராஜ் சிங், திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும், ஸ்கேட்டிங்கில் தேசிய சாம்பியன் பட்டம் வென்றிருப்பது எத்தனை பேருக்கு தெரியும். அறியப்படாத அவரின் இன்னொரு பக்கத்தையும் தெரிந்து கொள்வோம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Mar 14, 2023, 09:43 AM IST
  • யுவராஜ் சிங் 14 வயதுக்குட்பட்டோருக்கான ஸ்கேட்டிங்கில் தேசிய சாம்ப்யன்ஷிப் வென்றுள்ளார்
  • இளமையில் குழந்தை நட்சத்திரமாக பஞ்சாப் மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்
  • கிரிக்கெட்டைக் கடந்து டென்னிஸ் மற்றும் ஸ்கேட்டிங் அவருக்கு பிடித்தமான விளையாட்டுகள்
YUVI 40:  யுவராஜின் 12-ம் நம்பர் ரகசியம்.!! சுவாரஸ்ய பின்னணி title=

இந்திய கிரிக்கெட் அணியின் மிடில் ஆர்டர் தூணாக இருந்த யுவராஜ் சிங் (Yuvraj Singh), இன்று 40-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். ஒரு கிரிக்கெட் பிளேயராக, இந்திய அணிக்கு மிகப்பெரிய பங்களிப்பை செய்த அவர், மற்றொரு வீரரால் முறியடிக்க முடியாத பல சாதனைகளுக்கு சொந்தக்காரராகவும் உள்ளார். முதல் 20 ஓவர் உலகக்கோப்பையில், இங்கிலாந்து அணிக்கு எதிராக 6 சிக்சர்களை விளாசியது, 2011 ஆம் ஆண்டு இந்திய அணி 50 ஓவர் உலகக்கோப்பை வென்றபோது, தொடர்நாயகன் விருதை பெற்றது, அவரது கிரிக்கெட் வாழ்க்கையில் மகத்தான சாதனைகளாகும். 

மேலும் படிக்க | Viral Video: ரசிகரை வெறித்தனமாக அடித்த பிரபல கிரிக்கெட் வீரர்... தொப்பியை தொட்டதால் கோபம்!

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை, 20 ஓவர் மற்றும் 50 ஓவர் என 3 உலகக்கோப்பைகளை வெற்றிபெற்ற இந்தியஅணியில் இடம்பிடித்த ஒரே வீரர் யுவராஜ் சிங் மட்டுமே. 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பை காலிறுதிப்போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடி இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். அந்தப் போட்டிக்குப் பிறகு பத்திரிக்கையாளர்களை சந்திக்க வந்த அவருக்கு, அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் எழுந்துநின்று கைத்தட்டல் கொடுத்து வாழ்த்தியுள்ளனர். இது குறித்து பேட்டி ஒன்றில் குறிப்பிட்ட யுவராஜ் சிங், தனது வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய கவுரவங்களில் ஒன்று எனக் குறிப்பிட்டார். 

இந்திய அணிக்காக யுவராஜ் சிங் விளையாடியபோது அவர் அணிந்திருந்த ஜெர்சி எண் 12. இதற்கு பின்னணியில் ஒரு சுவாரஸ்யான செய்தி ஒன்று உண்டு. அவர் பிறந்த தினம் 12, மாதமும் 12. அதாவது டிசம்பர் மாதம் 12 ஆம் தேதி அவருடைய பிறந்தநாள். இதில் இன்னொரு சுவாரஸ்யம் என்னவென்றால், யுவராஜ் சிங் பிறந்த நேரமும் பிற்பகல் 12. அவர் பிறந்த மருத்துவமனை அமைந்திருந்த இடமும் சண்டிகரில 12வது வீதியில் இருந்துள்ளது. 

மேலும் படிக்க | IPL 2023: ரெய்னாவின் ஆல்டைம் சிறந்த பந்துவீச்சாளர் இவர் தான்...! சிஎஸ்கே வீரர் இல்லை

கிரிக்கெட் வீரராக உருவெடுப்பதற்கு முன் பள்ளியில் ஸ்கேட்டிங் வீர ராக இருந்துள்ளார் யுவராஜ் சிங். 14 வயதுக்குட்பட்டோருக்கான தேசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்ப்யன்ஷிப் போட்டியில் பட்டம் வென்றுள்ளார். அவருடைய அப்பாவின் விருப்பத்துக்கு ஏற்ப கிரிக்கெட் விளையாடிய அவர், அதில் மட்டுமே முழுமையாக கவனம் செலுத்தி தேசிய அணிக்கு தேர்வானார். யுவராஜ் சிங்கிற்கு பிடித்த மற்றொரு விளையாட்டு டென்னிஸ்.

யுவராஜ் சிங்கின் அப்பா யோகராஜ் சிங் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர், புகழ்பெற்ற பஞ்சாபி நடிகர். இதனால், யுவராஜ் சிங் குழந்தையாக இருந்தபோது ஒரு சில படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்துள்ளார். இங்கிலாந்தில் இருக்கும் புகழ்பெற்ற கவுன்டி கிரிக்கெட் அணிகளில் ஒன்றான யாக்ஷைர் அணிக்காக, இந்தியாவில் இருந்து 2 வீரர்கள் மட்டுமே விளையாடியுள்ளனர். ஒருவர் சச்சின், மற்றொருவர் யுவராஜ் சிங். விளையாட்டு பொழுபோக்குகளை கடந்து சமூக அக்கறை கொண்ட யுவராஜ் சிங், நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டவர். அதன்பிறகு "YOU WE CAN' என்ற தொண்டு நிறுவனத்தை தொடங்கி, அவரைப்போல் கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

 

Trending News