அதிமுக ஆட்சியில் மதுரை மத்திய சிறையில் 100 கோடி ஊழல் - பொதுநல வழக்கு!

மதுரை மத்திய சிறையில் கைதிகளால் எழுதுகோல்கள் தயாரிக்கப்பட்டு அரசு அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டதாக போலி கணக்கு மூலம் ஊழல் நடந்திருப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : Nov 16, 2021, 03:35 PM IST
அதிமுக ஆட்சியில் மதுரை மத்திய சிறையில் 100 கோடி ஊழல் - பொதுநல வழக்கு!

சென்னை: கடந்த அதிமுக ஆட்சியின்போது மதுரை மத்திய சிறையில் நூறு கோடி ஊழல் நடைபெற்றதாக கூறி லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், சிறைக்கைதிகள் உரிமை மைய இயக்குனருமான பி.புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள பொதுநல வழக்கில், மதுரை மத்திய சிறையில் சிறைக்கைதிகளால் மருத்துவ பொருட்கள்,ஸ்டேஷ்னரி பொருட்கள் தயாரிக்கப்பட்டு அவை அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள்,நீதிமன்றங்களுக்கு அனுப்பியதாக போலி கணக்கு தயாரித்து ஊழல் செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2016 முதல் 2021 மார்ச் மாதம் வரை நடைபெற்ற இந்த ஊழலில் சுமார் 100 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும் இதற்கான ஆதாரங்கள் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதிகமாக உற்பத்தி செய்ததாகவும், சிறைக்கைதிகளுக்கு சம்பளம் கொடுக்கப்பட்டதாகவும் போலி கணக்கு காண்பிக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். குறைந்த அளவே உற்பத்தி செய்து அதிக உற்பத்தி செய்தது போல் கணக்கு காண்பித்து உள்ளதாகவும், இதில் அப்போதைய சிறைத்துறை கண்காணிப்பாளர் மற்றும் டிஐஜிகளுக்கு தொடர்பு உள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார். 

இந்த ஊழல் தொடர்பாக உள்துறைச்செயலாளர், சிறைத்துறை டிஜிபிக்கு புகார் அனுப்பி எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். எனவே  இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறை உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என கேட்டுக்கொண்டார். 

ஏற்கனவே அதிமுக ஆட்சியில் பல முறைகேடுகள் நடந்துள்ளது என வழக்குகள் தொடரப்பட்டு வரும் வேளையில், மேலும் ஒரு வழக்கு, அதுவும் 100 கோடி ஊழல் என போடப்பட்டுள்ள பொதுநல வழக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News