தமிழகத்தில் 6-வது நாளாக ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..!

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,116 பேருக்கு கொரோனா தொற்று; மொத்தம் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 19,809 ஆக உயர்ந்துள்ளது.... 

Last Updated : Jun 5, 2020, 06:50 PM IST
தமிழகத்தில் 6-வது நாளாக ஆயிரத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு..! title=

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,116 பேருக்கு கொரோனா தொற்று; மொத்தம் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை 19,809 ஆக உயர்ந்துள்ளது.... 

தமிழகத்தில் இன்று மேலும் 1,438 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 28,694 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில், இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில்.... தமிழகத்தில் இன்று ஒரே நாளில் புதிதாக 1,438 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 27,256ல் இருந்து 28,694 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 861 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 12 பேர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில், கொரோனா காரணமாக, மொத்த பலி எண்ணிக்கை 232 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 15,762 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். சென்னையில், 19,000-யை கடந்துள்ளது கொரோனா பாதிப்பு. சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் புதிதாக 1,116 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,693-ல் இருந்து 19,809 ஆக உயர்ந்துள்ளது.

Image

Image

தமிழகத்தில் 6-வது முறையாக இரட்டை இலக்கத்தில், கொரோனா பலி எண்ணிக்கை பதிவாகியுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 6ஆவது நாளாக ஒரே நாளில் பாதிப்பு 1,000ஐ தாண்டியுள்ளது. இன்று ஒரே நாளில் 861 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். கை சுகாதாரம், மேற்பரப்பு சுகாதாரம் ஆகியவற்றை மக்கள் கடைபிடிக்க வேண்டும். மக்கள் ஒத்துழைப்பால்தான் இந்த பிரச்சினையை வெல்ல முடியும். வயது முதிர்ந்தவர்கள் செய்ய வேண்டியது என்ன, செய்ய கூடாதது என்ன என்பது குறித்தெல்லாம் நாங்கள் அறிவிக்கிறோம். மக்கள் அதை பின்பற்ற வேண்டும்" என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 

Trending News