2019 மக்களவை தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் அதிமுக மற்றும் திமுக தலைமையில் கூட்டணி அமைத்து வருகின்றனர். சில கட்சிகள் தனியாகவும் போட்டியிடப்போவதாக அறிவித்துள்ளன. தமிழகத்தை பொருத்த வரை அதிமுக மற்றும் திமுக பிரதான கட்சிகளாக வலம் வருகின்றன. இதனால் இந்த கட்சிகளுடன் யார் யார் கூட்டணி வைப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு அனைவரின் மத்தியில் எழுந்துள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் அதிமுக, பாஜக பாமக கூட்டணி உறுதியாகி உள்ளது. அதேபோல திமுகவில் காங்கிரஸ், மக்கள்தேசிய கட்சி கூட்டணி இறுதியாகி உள்ளது.
இந்தநிலையில், இன்று புதிய தமிழகம் கட்சி அதிமுக கூட்டணியில் இணைந்து போட்டியிட உள்ளதாக அக்கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி இன்று கூட்டணி தொகுதி உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளார்.
அதேபோல் திமுக கூட்டணியில் இந்திய ஜனநாயகக் கட்சி இணைந்துள்ளது. இன்று சென்னை அண்ணா அறிவாலயம் பச்சமுத்து திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
பின்னர் அக்கட்சியின் தலைவர் பச்சமுத்து கூறியாதவது, வரும் 2019 மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளோம். பாஜக கூட்டணியில் நாங்கள் இல்லாமல் போனதற்கான முக்கிய காரணம் பாமக தான் எனக் கூறினார்.