மாநிலத்தில் கொரோனா வழக்குகள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, வைரஸ் அதிகரிப்பதைத் தடுக்க நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க 26 தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் 112 தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
இதன்படி நோயாளிகள் தங்கள் சொந்த செலவில் இந்த மருத்துவமனைகளை அணுகி தங்களுக்கு கொரோனா உள்ளாதா? என அறிந்துக்கொள்ளலாம். மேலும் இந்த மருத்துவமனைகளில் அரசாங்கத்தால் வழங்கப்படும் சிகிச்சை நெறிமுறையைப் பின்பற்ற பரிந்துரைக்கப்படுகின்றன.
ஏற்கனவே, அப்பல்லோ மருத்துவமனைகளுக்கு நகரத்தில் உள்ள COVID19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் பல தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும், தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது குறித்த தினசரி அறிக்கையை பொது சுகாதாரம் மற்றும் தடுப்பு மருத்துவ இயக்குநருக்கு அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க அனுமதி பெற்றுள்ள ஒரு சில மருத்துவமனைகள் பட்டியல்...
- அடையாரில் உள்ள Fortis Malar மருத்துவமனை
- தரைமணியில் உள்ள The Voluntary Health Services
- வேலச்சேரி Prashanth மருத்துவமனை
- ஷெனாய் நகர் Billroth மருத்துவமனை
- நுங்கம்பாக்கம் Kanchi Kamakoti Childs trust மருத்துவமனை
- மைலாப்பூர் CSI Kalyani General மருத்துவமனை
- ஆல்வார்பேட் Kauvery மருத்துவமனை
- மனப்பாக்கம் MIOT மருத்துவமனை
- வடபழனி விஜயா மருத்துவமனை
- பெருங்குடி GEM மருத்துவமனை
- பல்லிகரணை Dr Kamakshi மருத்துவமனை