ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறி 3 கோடி மோசடி

போலீசார் முகம்மது சாகிப் உசைன் மற்றும் ஜேம்ஸ் ஜார்ஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 10, 2022, 12:21 PM IST
  • போலீசார் விரைந்து நடவடிக்கை
  • ஆன்லைனில் முதலீடு
  • சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பு
ஆன்லைனில் முதலீடு செய்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என கூறி 3 கோடி மோசடி title=

தூத்துக்குடி முத்தையாபுரம் பகுதியை சேர்ந்த திலீபன்ராஜ் மனைவி ஐஸ்வர்யா என்பவரது வாட்ஸ்அப்பிற்கு வந்த லிங்க் மூலம் போலியான முதலீடு நிறுவனத்தின் செயலியை பதிவிறக்கம் செய்து பணம் முதலீடு செய்துள்ளார்.

இதனையடுத்து தனது பணம் திரும்ப வராமல் மோசடி செய்யப்பட்டுள்ளதை அறிந்த ஐஸ்வர்யா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் பாலாஜி சரவணனிடம் புகார் அளித்தார்.

மேலும் படிக்க | கடத்தப்பட்ட 3 மணிநேரத்தில் மீட்கப்பட்ட பள்ளி மாணவிcc; அசத்திய சென்னை போலீஸ்

இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் இளங்கோவன் தலைமையிலான போலீசார் விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி அவரது உத்தரவின்பேரில் சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் அவர்கள் மேற்பார்வையில் சைபர் குற்ற பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், கேரளா பாலக்காடு கரியம்பழா பகுதியை சேர்ந்த முகம்மது சாகிப் உசைன் (25) மற்றும் பாலக்காடு போம்பரா பகுதியை சேர்ந்த ஜேம்ஸ் ஜார்ஜ் (25) ஆகிய 2 பேரும் சேர்ந்து ஐஸ்வர்யாவிடம் போலியான முதலீடு நிறுவனத்தின் மூலம் 24,42,186 கோடி ரூபாய் பணம் மோசடியில் ஈடுபட்டதும், மேலும் இவர்கள் இதுவரை தூத்துக்குடியில் 12 பேரிடம் சுமார் 37 லஞ்சமும் 10 நபர்களின் வங்கி கணக்கை பயன்படுத்தி 3 கோடி ரூபாய் வரை மோசடியில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. இதனிடையே போலீசார் முகம்மது சாகிப் உசைன் மற்றும் ஜேம்ஸ் ஜார்ஜ் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க | போதையில் போலீசையே கல்லால் அடித்த பெண் -வீடியோ!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News