ஆசிரியர் தகுதி தேர்வை எழுத மறுத்த அந்த 40,640 பேர்?...

தமிழகம் முழுவதும் நேற்று மற்றும் இன்று நடைப்பெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை 40640 பேர் எழுதவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது!

Last Updated : Jun 9, 2019, 08:06 PM IST
ஆசிரியர் தகுதி தேர்வை எழுத மறுத்த அந்த 40,640 பேர்?... title=

தமிழகம் முழுவதும் நேற்று மற்றும் இன்று நடைப்பெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை 40640 பேர் எழுதவில்லை என ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது!

மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தமிழகத்தில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தி வருகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர்களுக்கு முதல் தாள் தேர்வும், எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்களுக்கு இரண்டாம் தாள் தேர்வும் நடத்தப்படுகிறது.

அந்த வகையில் ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தொடர்பான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த பிப்ரவரி மாதம் 28-ஆம் தேதி அறிவித்தது. கடந்த மார்ச் மாதம் 15-ஆம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 12-ஆம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்க அவகாசம் அளிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை அடுத்து ஆசிரியர் தகுதி தேர்வுக்கு மொத்தம் 6, 40,156 பேர் விண்ணப்பித்து இருந்தனர். அதில் முதல் தாள் தேர்வுக்கு 1,83,341 பேரும், 2-ம் தாள் தேர்வுக்கு 4 ,20,815 பேரும் விண்ணப்பித்திருந்தனர்.

முதல் தாள் தேர்வு நேற்று நடைபெற்றது. தமிழகம் முழுவதும் 471 தேர்வு மையங்களும், சென்னையில் மட்டும் 28 மையங்களும் அமைக்கப்பட்டு இருந்தன. ஆசிரியர் தகுதிக்கான 2-ம் தாள் தேர்வு இன்று நடைபெற்றது.

இந்நிலையில் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தகவலின்படி, தமிழகத்தில் 1,081 மையங்களில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வை 40,640 பேர் எழுதவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்த 4,20,957 பேரில் 3,80,317 பேர் தேர்வு எழுதினர் என குறிப்பிட்டுள்ளது. 

Trending News