முதல்முறையாக விமானத்தில் பறந்த பழங்குடி இன மக்கள்!

முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்தது மிகவும் அற்புதமாக இருந்தது என மலைவாழ் பழங்குடியின மக்கள் தெரிவித்துள்ளனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 21, 2022, 03:48 PM IST
  • முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்த 41 மலைவாழ் பழங்குடியின மக்கள்
  • சென்னையில் 2 நாள் தங்கி இருந்து சுற்றி பார்த்து கோவைக்கு ரயிலில் செல்ல உள்ளனர்
முதல்முறையாக விமானத்தில் பறந்த பழங்குடி இன மக்கள்! title=

கோவையில் இருந்து சென்னைக்கு முதல் முறையாக விமானத்தில் பயணம் செய்த 41 மலைவாழ் பழங்குடியின மக்கள் சென்னை சுற்றி பார்ப்பதற்கு ஈஷா மையம் ஏற்பாடு செய்தது. அதன்படி இவர்கள் 4 மலை கிராம பழங்குடியின பெண்கள், குழந்தைகள் உள்பட 41 பேர் தங்களது சொந்த பணத்தில் முதன் முறையாக கோவையில் இருந்து  விமானம் முலம் சென்னை வந்தனர். இவர்களை ஈஷா மையம் நிர்வாகிகள் ஒருங்கிணைந்து அழைத்து வந்தது. அவர்கள் சென்னையில் 2 நாள் தங்கி இருந்து சுற்றி பார்த்து கோவைக்கு ரயிலில் செல்ல உள்ளனர்.

கோவை மாவட்டம் வெள்ளியங்கிரியில் உள்ள ஈஷா யோகா மையத்தில் சுற்றுப்புற கிராமத்தை சேர்ந்த பழங்குடியின மக்கள் ஈஷா மையம் சுற்றி வணிக நிறுவனங்கள் நடத்தியும் ஈஷா மையத்தில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் அங்கு பேட்டரி வாகனங்கள் இயக்குவது போன்ற பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி நேற்று சென்னை வந்த பழங்குடியின மக்கள், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தனர் அப்போது, ஈஷா யோகா மையத்தை சார்ந்தே தங்களது வாழ்வாதாரம் உள்ளதாகவும், ஈஷா மையத்தில் பணி செய்தும் வணிக நிறுவனம் நடத்தியும் வருமானம் ஈட்டி வருகிறோம் என்று தெரிவித்தனர். மேலும் பேசிய அவர்கள் தங்களது வாழ்க்கைத் தரம் உயர்ந்து உள்ள நிலையில் தமது சொந்த வருமானத்தில் விமானத்தில் முதன் முறையாக பயணித்தது மகிழ்ச்சி தருவதாக தெரிவித்தனர்.

வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தை சுற்றியிருக்கும் தாணிகண்டி, மடக்காடு, முள்ளங்காடு, பட்டியார் கோவில்பதி கிராமங்களை சேர்ந்த அந்த 41 பழங்குடி இன மக்கள், இண்டிகோ விமானத்தில் காலை 11:30 மணிக்கு கோவையிலிருந்து புறப்பட்டு 12:45 மணிக்கு சென்னை வந்தடைந்தனர்.

முதல் முறையாக விமான பயணம் செய்யும் இவர்களை சிறப்பித்து வரவேற்கும் விதமாக இண்டிகோ ஏர்லைன்ஸ் கோவை விமான நிலையத்தில் வரவேற்பு பலகை வைத்ததோடு, விமானத்தில் ஏறியதும் விமானி இவர்களை மற்ற பயணிகளுக்கு ஒலி பெருக்கியில் அறிமுகப்படுத்தினார். மேலும் பயணத்தின் பொழுது அனைவருக்கும் சிறப்பான உணவும் வழங்கப்பட்டது. இதுவரை தொலைக்காட்சியில் மட்டுமே விமானத்தை பார்த்து வந்த தங்களுக்கு முதல் முறை விமான பயண அனுபவம் வார்த்தைகளால் விவரிக்க இயலாத அளவுக்கு இனிமையானதாக இருந்தது என பழங்குடியின மக்கள் தெரிவித்தனர்.

Trending News