தமிழகத்தில் சற்று சரிவை கண்டுள்ள கொரோனா பாதிப்பு.... ஒரே நாளில் 98 பேர் பலி...

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 5,875 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது... மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 2,57,613 ஆக அதிகரிப்பு...!

Last Updated : Aug 2, 2020, 07:27 PM IST
தமிழகத்தில் சற்று சரிவை கண்டுள்ள கொரோனா பாதிப்பு.... ஒரே நாளில் 98 பேர் பலி...  title=

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவாக ஒரே நாளில் 5,875 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது... மொத்த பாதிப்பின் எண்ணிக்கை 2,57,613 ஆக அதிகரிப்பு...!

தமிழகத்தில் இன்று மேலும் 5, 875 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,57,613 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4,132 ஆக உயர்ந்துள்ளது. 

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... தமிழகத்தில் இன்று புதிதாக 5, 875 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 5,811 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். சுமார், 65 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என கண்டறியபட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 2,57,613 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று பாதிக்கப்பட்ட 5,875 பேரில் சென்னையில் மட்டும் 1,065 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால், சென்னையில் மட்டும் சுமார் 1,01,951 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் 122 ஆய்வகங்கள் (அரசு - 59 மற்றும் தனியார் - 63) உள்ளன. அதில், இன்று மட்டும் 60,344 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 27,79,062  மாதிரிகள் சோதனை செய்யபட்டுள்ளது. இன்று கொரோனா வைரஸ் உறுதியானவர்களில், 3,489 பேர் ஆண்கள், 2,386 பேர் பெண்கள். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 1,56,140 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 1,01,446 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 27 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் இன்று மட்டும் 5,517 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்நிலையில், வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 1,96,483 ஆக உயர்ந்து உள்ளது.

Image

Image

தமிழகத்தில், இன்று மட்டும் கொரோனா பாதித்த 98 பேர் உயிரிழந்தனர். அதில், 23 பேர் தனியார் மருத்துவமனையிலும், 75 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 4,132 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 56,998 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 12 ஆயிரத்து 790 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 2 லட்சத்து 12 ஆயிரத்து 589 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 32 ஆயிரத்து 234

ALSO READ | நாளை முதல் தென்மேற்கு பருவமழை வலுவடையும்.. TN-ல் 19 மாவட்டங்களில் கனமழை..!

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ் விவரங்கள்....

Image

Trending News