அதிமுக அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது!

அதிமுக அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது - காவல் ஆணையர் சங்கர் ஜிவால்!

Written by - ZEE Bureau | Last Updated : Dec 5, 2021, 01:35 AM IST
அதிமுக அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது!

சென்னை :அதிமுக அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக வந்த புகாரில் வழக்கு பதிவு செய்திருப்பதாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள காவல் ஆணையரகத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது செய்தியாளர்கள், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கட்சியில் அடிப்படை உறுப்பினராக கூட இல்லாத கட்சியினை சாராத சிலர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து வேட்புமனு கேட்டு பிரச்சனையில் ஈடுபடுவதாகவும், உள் நோக்கத்துடன் செயல்படும் சமூக விரோதிகள் மீது உரிய நடவடிக்கை எடுத்து தேர்தல் அமைதியான முறையில் நடக்க சட்டம் ஒழுங்கை காப்பாற்ற உரிய பாதுகாப்பினை அளிக்க வேண்டும் என்று காவல் ஆணையரிடம்  புகார் மனு கொடுத்தது குறித்து கேள்வி எழுப்பினர். 

ALSO READ பிறந்தவுடன் கழிவறையில் கொலையான 'பெண் சிசு' - காவல்துறை விசாரணை

அதற்கு பதிலளித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், அதிமுக அலுவலகம் உட்பட பொது இடத்தில் பிரச்சனை ஏற்படாமல் தடுக்கவும் ,  சட்டம் ஒழுங்கு பாதுகாக்கவும் , காவல்துறை சார்பில் உரிய பாதுகாப்பு வழங்கப்படும்.   அதோடு அதிமுக அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக நேற்று ஒரு புகாரும் வந்தது, அந்த புகாரை அடிப்படையாக வைத்து வழக்கு பதிவு செய்துள்ளோம் என்று கூறினார். 

மேலும் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர்  வெங்கடாசலத்தின் தற்கொலை மரணம் 2-ம் தேதி நடந்துள்ளது. அவர் அன்று மதியம் 12 மணிக்கு மேல் உணவருந்தியுள்ளார். 3 மணிக்கு அறைக்குள் சென்று பார்த்த போது அவர் இறந்தது தெரிய வந்திருக்கிறது. இதனை தொடர்ந்து வெங்கடாசலம் தற்கொலையில் இதுவரை கிடைத்த  வாக்குமூலப்படி அவரது மரணத்தில் எந்தவித சந்தேகமும் இல்லை.  மேலும் அவர் வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட அவரது செல்போன் , டேப் தொடர்பாக தடயவியல் துறையின் அறிக்கைக்காக காத்திருக்கிறோம். 

admk

அதனையடுத்து விஜிலென்ஸ் சார்பாக  வெங்கடாசலத்திற்கு சம்மன் அனுப்பியதாக எங்களது தரப்பில் எந்த தகவலும் இல்லை.  எப்போது விசாரணைக்கு வர முடியும்? என்று தான் விஜிலென்ஸ் அதிகாரிகள் அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.  மேலும் இதுகுறித்து விசாரணையில் கிடைக்கும் தகவலை பொறுத்து அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும்.  தற்போது சட்டப்பிரிவு 174 ன் படி வழக்கு பதியப்பட்டு இருக்கிறது, இதனையடுத்து உடற் கூறு ஆய்வு அறிக்கை கிடைத்த பிறகு தேவைப்பட்டால் கூடுதலாக சட்டப் பிரிவுகளை சேர்ப்பது குறித்து முடிவு செய்யப்படும்" என்று சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் செய்தியாளர்களிடம் அளித்த பெட்டியில் கூறியுள்ளார்.

ALSO READ அரசு பேருந்தை ஓட்டிய தமிழக அமைச்சர்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

More Stories

Trending News