தமிழகத்தில் மேலும் 31 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்!!
தமிழகத்தில் இன்று மேலும் 31 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1204 பேர் ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து இன்று மாலை 6 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்து மாநில சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் கூறுகையில்.... "தமிழகத்தில் வீட்டு கண்காணிப்பில் 28711 பேர் உள்ளனர். தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 31 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1204 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தமிழகத்தில் இன்றுடன் 81 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
வீட்டு கண்காணிப்பில் இருப்பவர்கள்: 28, 711 பேர். அரசு கண்காணிப்பில் இருப்பவர்களின் எண்ணிக்கை: 135 பேர். 28 நாள் கண்காணிப்பு முடிந்தவர்களின் எண்ணிக்கை: 68, 519 பேர். தமிழகத்தில் மொத்தம் 25 ஆய்வகங்கள் உள்ளன. அதில், 16 அரசு ஆய்வகங்களும், 9 தனியார் ஆய்வகங்களும் செயல்படுகின்றன.
நேற்று வரை 1,173 பேருக்கு கொரோனா பாதிக்கபட்டவர்கள் உள்ள நிலையில், இன்று மேலும் 31 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 33 பேர் 10 வயதுக்கு உட்பட்டவர்கள். 31 பேரில் 15 பேர் ஆண்கள். 16 பேர் பெண்கள்.
திண்டுக்கல் - 9
சென்னை- 5
தஞ்சை-4
தென்காசி- 3
மதுரை -2
ராமநாதபுரம்-2
நாகப்பட்டினம்-2
கடலூர்-1
சேலம் -1
சிவகங்கை-1
குமரி மாவட்டத்தில் -1
இந்நிலையில், கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 81 பேர் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர். இதுவரை தமிழகத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். ஒரே நாளில் 6,509 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது" என அவர் தெரிவித்துள்ளார்.