மாநிலங்களவை தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

மாநிலங்களவை தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Written by - Chithira Rekha | Last Updated : May 26, 2022, 10:51 AM IST
  • மாநிலங்களவைக்கான அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு
  • முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு வாய்ப்பு
  • முடிவுக்கு வந்த இழுபறி
மாநிலங்களவை தேர்தல் - அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு title=

தமிழகத்தில் 6 எம்.பி.க்கள் உட்பட 15 மாநிலங்களில் 57 மாநிலங்களவை எம்.பி.க்களின் பதவிக் காலம் முடிவடையவுள்ளது. தமிழகத்தில் திமுகவின் டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ்.பாரதி, கேஆர்என் ராஜேஷ்குமார், அதிமுகவின் நவநீதகிருஷ்ணன், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், ஏ.விஜயகுமார் ஆகிய 6 பேரின் பதவிக்காலம் வரும் ஜூன் 29-ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. 

தமிழகத்தில் உள்ள 6 இடங்களில் 4 இடங்கள் திமுகவுக்கும், 2 இடங்கள் அதிமுகவுக்கும் கிடைத்துள்ளன. இதில் திமுகவின் 3 இடங்களுக்கான வேட்பாளர்களாக தஞ்சை கல்யாண சுந்தரம், இரா.கிரிராஜன், கே.ஆர்.என். ராஜேஷ்குமார் ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர். ஒரு இடம் கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி இன்னும் தனது வேட்பாளரை அறிவிக்கவில்லை.

மேலும் படிக்க | ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு காங்கிரஸில் கடும் போட்டி

வேட்புமனுத் தாக்க நேற்று தொடங்கிய நிலையில், அதிமுக வேட்பாளர்களை அறிவிப்பதில் இழுபறி நீடித்தது. வேட்பாளர்களை தேர்வு செய்வதில் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். இடையே உடன்பாடு ஏற்படாததாலேயே வேட்பாளர் தேர்வு தாமதமானதாக கூறப்பட்டது. முன்னதாக, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், சி.வி.சண்முகம் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என தகவல் வெளியானது.

admk rajyasabha candidate list

தற்போது, முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம், முதுகுளத்தூர் ஒன்றிய செயலாளர் தர்மர் ஆகியோர் அதிமுகவின் ராஜ்யசபா வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இதில், தர்மர் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளர் ஆவார். ஓ.பிஎ.ஸ் ஆதரவாளரான இவர், ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர்கள் விரைவில் வேட்புமனு தாக்கல் செய்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | மாநிலங்களவை எம்.பி. தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது திமுக!

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News