சென்னையை தொடர்ந்து சேலத்திலும் தற்போது முக கவசம் அணிவது கட்டாயம்...

கொரோனா பரவுதல் தடுப்பு முயற்சியாக சேலம் மாநகராட்சிப் பகுதியில் வீட்டை விட்டு வெளியே வரும் நபர் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

Last Updated : Apr 15, 2020, 09:00 AM IST
சென்னையை தொடர்ந்து சேலத்திலும் தற்போது முக கவசம் அணிவது கட்டாயம்... title=

கொரோனா பரவுதல் தடுப்பு முயற்சியாக சேலம் மாநகராட்சிப் பகுதியில் வீட்டை விட்டு வெளியே வரும் நபர் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முக கவசம் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி எச்சரித்துள்ளது. மற்றும் வைரஸ் தொற்றில் இருந்து காத்துக்கொள்ள அனைவரும் பொதுவெளியில் ஒரு மீட்டர் இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.

முன்னதாக நகரில் பொதுவெளியில் வாகன நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் சேலத்தில் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே வாகனங்கள் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சாலைகளில் வரும் வாகனங்களை கண்கானிக்க பதிவெண் பலகையில் மஞ்சள், பச்சை, சிவப்பு நிறங்களில் காவல்துறையினர் கோடிட்டு அடையாளப்படுத்துகின்றனர்.

Read | தட்டுப்பாட்டில் முக கவாசம்.... எளிமையான முறையை கண்டுபிடித்த பிரபலம்!

இந்நிலையில் தற்போது சேலம் மாநகராட்சியில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருமல், தும்மலின்போது தெறிக்கும் உமிழ்நீர் மூலமாக கொரோனா வைரஸ் பரவக்கூடும் என்பதால் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முன்னதாக தமிழகத்தில் சென்னை நகர குடிமை அமைப்பு திங்களன்று முக கவசம் அணிவதை சென்னையில் கட்டாயமாக்கியது. கொரோனா வைரஸின் பரவலை சரிபார்க்க ஏப்ரல் 30-ஆம் தேதி வரை தமிழக அரசு முழு அடைப்பை நீட்டித்துள்ள நிலையில் சென்னை நகர குடிமை அபைப்பின் இந்த உத்தரவு வெளியாகியுள்ளது. 

Read | முழு ஊரங்கு உத்தரவால் முகமூடிகளுக்கான தட்டுப்பாட்டை சமாளிக்க எளிய வழிமுறை!

மேலும், "அத்தியாவசிய இயக்கத்திற்காக பாஸ் பெற்றவர்களும் முக கவசங்களை அணிய வேண்டும். முக கவசம் இல்லாமல் காணப்பட்டால், அவர்களின் இயக்க பாஸ்கள் ரத்து செய்யப்பட்டு, மூன்று மாதங்கள் வரை அவர்களது வாகனங்கள் அரசு கட்டுப்பாட்டில் எடுக்கப்படும். மேலும் இந்த உத்தரவு உடனடியாக நடைமுறைக்கு வரும்," என்றும் இந்த அறிவிப்பு கூறுகிறது.

முழு அடைப்பின் போது அத்தியாவசிய நோக்கங்களுக்காக பயணத்தை எளிதாக்க அதிகாரிகளால் இயக்க பாஸ் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. 

Trending News