அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு
5 கோடி மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்த புகாரில் மத்திய குற்ற குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், மகள் மற்றும் மருமகன் ஆகிய மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வழக்கு மகேஷ் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிந்தனர் மத்திய குற்றப்பிரிவு போலீசார்
முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்து விட்டது.
திமுக பிரமுகரை தாக்கி அவமானப்படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்தது. ஜெயக்குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, சம்பவம் நடைபெற்ற வார்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தால் உண்மை வெளிவரும் என்றும் தாக்கபட்ட நபருக்கு எந்தவித காயங்களும் இல்லை என்றும் கூறினார். இந்த வழக்கு அரசியல் உள் நோக்கத்துடன் பதியபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், ஜெயக்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்ககோரிய மனுவை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
புகார்தாரர் நரேஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, சட்டம் படித்த முன்னாள் அமைச்சரான அவர் இது போன்ற செயல்களை செய்வது துரஷ்திடவசமானது என்றும், சாதாரண நபரை அரை நிர்வாணபடுத்தி ஊர்வலமாக அழைத்து சென்று அதனை சமூக வலைதளத்தில் பதிவேற்றி அவருக்கு பெரிய பாதிப்பை எற்படுத்தியுள்ளார் என்றும் கூறினார்.
மேலும் படிக்க | அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு ஜாமீன்
வாக்கு சாவடிக்குள் நுழைய அரசியல் கட்சியை சேரந்தவருக்கு மாநில தேர்தல் ஆணையம் எந்த அதிகாரமும் வழங்காத போது, முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் வாக்குசாவடிக்குள் நுழைந்து கலவரத்தை தூண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஜெயக்குமார் முன்னாள் அமைச்சர் என்பதால் ஜாமீன் கோரி அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடியாது என்றும், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் எனவும் அவர் வாதிட்டார்.
அதற்கு ஆட்சேபம் தெரிவித்த ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர், சிறப்பு நீதிமன்றம் அமைத்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் ஜாமீன் மனுக்களை மற்ற நீதிமன்றங்கள் விசாரிக்க கூடாது என குறிப்பிடப்படவில்லை எனவும், ஜாமீன் மனுவை மற்ற நீதிமன்றத்தில் விசாரிக்கலாம் எனவும், சாட்சி விசாரணை மட்டுமே சிறப்பு நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் எனவும் தெரிவித்தார்.
மாநகர குற்றவியல் தலைமை வழக்கறிஞர் தேவராஜன், அவர் சில நாட்கள்தான் சிறையில் உள்ளார், 40 பேர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டது, முன்னாள் அமைச்சர் என்ற அதிகாரத துஷ்பிரயோகம் செய்துள்ளார், பலர் தலைமறைவாகி உள்ளனர்’ என தெரிவித்தார்.
ஜெயக்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க கோரி தாக்கல் செய்த வழக்கை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் மீண்டும் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, புகாரின் தீவிரத்தை கருத்தில் கொண்டும், காவல் துறையின் ஆட்சேபத்தை கருத்தில் கொண்டும் ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், கைதாகி சில நாட்களே ஆவதாலும், விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருப்பதாலும், பாதிக்கப்பட்டவர் இன்னும் மருத்துவமனையில் உள்ளார் போன்ற காவல்துறை வாதங்களையும் ஏற்று, ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி அல்லி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, அண்மையில் நடைபெற்ற நகர்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவின்போது ராயபுரம் தொகுதியில் கள்ள ஓட்டு போடவந்ததாக கூறி ஒருவரை அதிமுகவினர் பிடித்தனர். பின்னர், அவரை அரை நிர்வாணப்படுத்தி தாக்கிய அதிமுகவினர், அவரை ஊர்வலமாகவும் அழைத்துச் சென்றனர். அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.
மேலும் படிக்க | முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மற்றொரு வழக்கிலும் கைது
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR