மருத்துவமனைகளில் உயிர்காக்கும் வசதிகளை உறுதி செய்க: எடப்பாடி பழனிசாமி

மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம்  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, படுக்கை மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : May 14, 2021, 02:57 PM IST
  • தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் தாக்கம் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது.
  • நாள்தோறும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புதிதாக தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர்.
  • சென்னையில் மட்டும் 7000 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர்.
மருத்துவமனைகளில் உயிர்காக்கும் வசதிகளை உறுதி செய்க: எடப்பாடி பழனிசாமி  title=

தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையின் (Corona Second Wave) தாக்கம் மிகவும் தீவிரம் அடைந்துள்ளது. நாள்தோறும் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புதிதாக தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி வருகின்றனர். குறிப்பாக, மொத்த பாதிப்பில், சென்னையில் மட்டும் 7000 பேருக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். 

மருத்துவமனைகளில் நோயாளிகளின் கூட்டம்  நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக, படுக்கை மற்றும் ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையினால், அரக்கோணம் செங்கல்பட்டு உள்ள சில இடங்களில் நோயாளிகள் இறந்து விட்டதாகவும் செய்திகள் வெளியானது. 

இதை அடுத்து, மருத்துவ மனைகளில் உயிர் காக்கும் வசதிகள் உறுதி செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்து, முன்னாள் முதலமைச்சரும், எதிர்கட்சி தலைவராகவும் உள்ள எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்தார்.

ALSO READ | மக்களுக்கு உதவ களம் இறங்கிய பாஜக MLA MR. காந்தி, ISRO விடம் இருந்து ஆக்ஸிஜன் சப்ளை

 

தமிழ்நாடு முழுவதும் அரசு மருத்துவமனைகளிலும், தனியார் மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் மற்றும் ரெம்டெசிவிர் போன்ற உயிர் காக்கும் வசதிகள் இன்றி பல்லாயிரக்கணக்கில் கொரோனா பாதித்த மக்கள் அல்லல்படுவதையும், படுக்கை வசதியின்றி தவிப்பதையும், ஆக்சிஜன் பற்றாக்குறையால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலர் உயிரிழப்பதையும் அறிந்து ஆற்றொனாத் துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைகிறேன்.

மக்களை காக்கின்ற பெரும் பொறுப்பு தற்போதைய அரசுக்கு இருப்பதால், மாண்புமிகு முதலமைச்சர் திரு. முக ஸ்டாலின் அவர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளுக்கு வரும் பொதுமக்களின் விலைமதிப்பில்லா இன்னுயிரை பாதுகாத்திடும் வகையில், அவர்களுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கவும், போதிய ஆக்சிஜன் கிடைக்கவும், தடுப்பு மருந்துகள் கிடைக்கவும், போர்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன், என வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா (Corona) பாதிப்பின் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் முழு ஊரடங்கு விதிக்கப்பட்டு உள்ளது. இந்த முழு ஊரடங்கில் (Lockdown)  அத்தியாவசிய சேவைகள் மட்டுமே இயங்கப்பட்டு வருகிறது. 

இந்நிலையில் கொரோனா இரண்டாம் அலையால் தமிழகத்தில் நாள்தோறும் 30 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

ALSO READ | அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு; சானிடைசரை அதிகம் பயன்படுத்துவதும் ஆபத்து

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

 

Trending News