அதிமுக கட்சியில் வேட்பாளர்களை தேர்வு செய்வது போற்ற முக்கிய முடிவுகளை எடுக்கும் அதிகாரம் கொண்டது ஆட்சி மன்றக்குழு. இதன் தலைவராக ஜெயலலிதா இருந்து வந்தார். ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் அந்த பதவி காலியாகவே இருந்தது.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சர்கள் ஓன்று கூடி ஆட்சி மன்றக் குழு மாற்றியமைக்கப்படுவதாக அறிவித்தனர்.
இந்நிலையில், இன்று கூடிய அக்கட்சியின் கூட்டத்தில் ஆட்சி மன்றக் குழு மாற்றியமைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆட்சிமன்றக் குழுவில் புதிதாக எடப்பாடி பழனிசாமி, கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. தற்போது மாற்றியமைக்கப்பட்ட ஆட்சி மன்றக்குழு தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளரை முடிவு செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைமைக் கழகச் செய்தி
கழக ஆட்சி மன்றக் குழு#AIADMK pic.twitter.com/4hA0zybLp7— O Panneerselvam (@OfficeOfOPS) November 27, 2017