தமிழகம் முழுவதும் இன்று திமுக அரசுக்கு எதிராக அதிமுக-வினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவதாக அதிமுக குற்றம் சாட்டியுள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் (MK Stalin) தலைமையிலான திமுக அரசுக்கு எதிராக, அதிமுக சார்பில் இன்று கவன ஈர்ப்பு போராட்டத்தை நடத்தி வருகிறது. பெட்ரோல் விலை குறைப்பு, நீட் தேர்வு ரத்து போன்ற முக்கிய வாக்குறுதிகள் வாக்குறுதிகளாகவே முடங்கிக்கிடக்கின்றன என அதிமுக சாடி வருகிறது. நீட் தேர்வை ரத்து செய்யாமல் கண்துடைப்புக்காக கமிஷனை திமுக அரசு அமைத்ததாக முன்னாள் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
முன்னதாக, வெற்றிக்காக மட்டும் தேர்தல் வாக்குறுதிகளை அளித்துவிட்டு, வெற்றி பெற்றவுடன் அவற்றைக் கண்டுகொள்ளாத திமுக (DMK) ளும் தொண்டர்களும் அவரவர் வீட்டு வாயிலில் அனைத்து வித கொரோனா விதிமுறைகளையும் பின்பற்றி அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ALSO READ:ஆவின் முறைகேடு: ரூ.10.37 கோடி ஊழல்; முக்கிய கோப்புகள் மாயம்
இன்று காலை 10 மணியளவில் தமிழகம் முழுவதும் இந்த போராட்டம் தொடங்கியது. முன்னாள் தமிழக முதல்வரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி (Edappadi K Palaniswami) தலைமையில் சேலம் நெடுஞ்சாலை நகர் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றது. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வமும் போடியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இன்றை ஆர்ப்பாட்டத்தில் ஆதிமுக எடுத்துக்கொண்ட முக்கிய விவகாரங்கள் பின்வருமாறு:
- கொரோனா மரணங்கள் மறைக்கப்பட்ட விவகாரம். பல மக்களுக்கு மருத்துவ வசதிகள் மறுக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கப்பட்டது.
- நீட் தேர்வு விவகாரம். நீட் தேர்வை ரத்து செய்வதாகக் கூறி கண் துடைப்புக்காக ஆணையத்தை மட்டும் அமைத்த திமுக அரசுக்கு எதிராக வன்மையான குற்றச்சாட்டு.
- பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் அறிவித்தது திமுக. ஆனால், திமுக ஆட்சி அமைத்ததிலிருந்து விலை ரூ.10 உயர்ந்துள்ளது.
- மேகதாது அணை விவகாரத்தில் நிலையான எந்த முடிவும் இன்னும் எடுக்கப்படவிலை. தமிழகம் மீண்டும் தண்ணீருக்கு தவிக்கும் நிலைதான் எற்படுமா என கேள்வி கேட்கிறது ஆதிமுக.
ALSO READ: பொறியியல் வகுப்புகள் ஆகஸ்ட் 18 ஆம் தேதி தொடங்கும்: அண்ணா பல்கலைக்கழகம்
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR