தமிழகத்தில் ஆவின் பால் விலை குறைப்பு அமலுக்கு வந்தது!

தமிழகத்தில் ஒரு லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்பட்ட ஆவின் பால் விலை இன்று காலை முதல் நடைமுறைக்கு வந்ததுள்ளது.

Written by - ZEE Bureau | Last Updated : May 16, 2021, 10:53 AM IST
தமிழகத்தில் ஆவின் பால் விலை குறைப்பு அமலுக்கு வந்தது!

சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின் 5 கோப்புகளில் கையெழுத்திட்டார். அதில் ‘ஆவின்’ பால் விலை குறைக்கப்படும் அறிவிப்பும் ஒன்றாகும். அதன் அடிபடையில் கடந்த 8 ஆம் தேதி ஆவின் பால் விலை குறைக்கப்படுவது தொடர்பான முழு விவரத்தையும் தமிழக அரசு வெளியிட்டது. மேலும் இந்த திட்டம் 16 ஆம் தேதி முதல் அதாவது இன்று முதல் அமல்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. 

ஆவின் பால் (Aavin Milk) விலை குறைப்பால் பொதுமக்கள் மகிழ்ந்துள்ளனர். விலை குறைப்பினை அவர்கள் வரவேற்றுள்ளனர். இந்நிலையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ‘ஆவின்’ பால் (Milk) விலை குறைப்பு அமலுக்கு வருகிறது. 

ALSO READ | Aavin Milk Confustion: ஆவின் பால் தொடர்பாக தவறான தகவல்கள் பரப்பப்படுவது ஏன்?

குறைக்கப்பட்ட ஆவின் பால் விலை குறித்த முழு விவரம் வருமாறு:-
ஆவின் 1 லிட்டர் நீல நிற ‘நைஸ்’ பாக்கெட் ரூ.3 விலை குறைந்து, ரூ.40-க்கு விற்பனை ஆகிறது. 1/2 லிட்டர் பாக்கெட் ரூ.1.50 விலை குறைந்து, ரூ.20-க்கு விற்பனை ஆகிறது. ஆவின் 1/2 லிட்டர் பச்சை நிற ‘மேஜிக்’ பாக்கெட் ரூ.1.50 விலை குறைந்து, ரூ.22-க்கு விற்பனை ஆகிறது. ஆவின் 1/2 லிட்டர் ஆரஞ்சு நிற ‘பிரீமியம்’ பாக்கெட் ரூ.1.50 விலை குறைந்து, ரூ.24-க்கு விற்பனை ஆகிறது. ஆவின் 1/2 லிட்டர் ரோஸ் நிற ‘டயட்’ பாக்கெட் ரூ.1.50 விலை குறைந்து, ரூ.18.50-க்கு விற்பனை ஆகிறது. ஆவின் 1 லிட்டர் டீமேட் பாக்கெட் ரூ.3 விலை குறைந்து, ரூ.57-க்கு விற்பனை ஆகிறது.

ஆவின் பால் அட்டை அடிப்படையில் விலை குறைப்பு பட்டியல் விவரம் வருமாறு:-
ஆவின் 1 லிட்டர் நீல நிற ‘நைஸ்’ பாக்கெட் ரூ.3 விலை குறைந்து, ரூ.37-க்கு விற்பனை ஆகிறது. 1/2 லிட்டர் பாக்கெட் ரூ.1.50 விலை குறைந்து, ரூ.18.50-க்கு விற்பனை ஆகிறது. ஆவின் 1/2 லிட்டர் பச்சை நிற ‘மேஜிக்’ பாக்கெட் ரூ.1.50 விலை குறைந்து, ரூ.21-க்கு விற்பனை ஆகிறது. ஆவின் 1/2 லிட்டர் ஆரஞ்சு நிற ‘பிரீமியம்’ பாக்கெட் ரூ.1.50 விலை குறைந்து, ரூ.23-க்கு விற்பனை ஆகிறது. ஆவின் 1/2 லிட்டர் ரோஸ் நிற ‘டயட்’ பாக்கெட் ரூ.1.50 விலை குறைந்து, ரூ.18-க்கு விற்பனை ஆகிறது.

அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News