Tamil Nadu Auto Booking App: தமிழ்நாட்டில் ஓலா, உபேர் செயலிக்கு மாற்றாக அரசு ஒரு புதிய செயலியை உருவாக்க வேண்டும் என ஆட்டோ ஓட்டுனர்கள் சார்பில் அரசிடம் கோரிக்கை தொடர்ச்சியாக வைக்கப்பட்டு வந்தது. அந்த வகையில், தமிழ்நாடு போக்குவரத்து துறையின் சார்பில் ஸ்டார்ட் அப் TN (Startup TN) மற்றும் தனியார் நிறுவனம் ஒன்றும் இணைந்து இந்த செயலியை உருவாக்கும் முயற்சியில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயலியின் பெயர் இதுதான்?
இதில், முதல் கட்டமாக கிண்டியில் உள்ள தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவன பயிற்சி மையத்தில் ஆட்டோ தொழிற் சங்க நிர்வாகிகளுடன் முதல் கட்ட ஆலோசனை கூட்டம் போக்குவரத்து துணை ஆணையர் தலைமையில் நேற்று நடைபெற்றது. மேலும், இந்த செயலிக்கு TATO என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோக்களுக்கு அரசு தரப்பில் முன்பு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. எனவே, அதற்கு பதிலாக ஆட்டோவில் குறைந்தபட்ச கட்டணமாக ஒரு கிலோ மீட்டருக்கு 50 ரூபாயும், அதற்கு மேல் கிலோ மீட்டருக்கு 25 ரூபாயும் நிர்ணயம் செய்ய வேண்டும் என ஆட்டோ தொழிற்சங்கத்தினர் இந்த கூட்டத்தில் வலியுறுத்தி உள்ளனர்.
மேலும் படிக்க | தீபாவளியையொட்டி 16,895 சிறப்பு பேருந்துகள் இயக்கம்!
முன்னர், சென்னையில் ஓடும் ஆட்டோக்களுக்கு முதல் 1.8 கிலோ மீட்டர் தூரத்திற்கான ஆட்டோ கட்டணம் 25 ரூபாய் என்றும், ஒவ்வொரு கூடுதல் கிலோ மீட்டருக்கு கட்டணம் 12 ரூபாய் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால் தற்போது இது நடைமுறையில் இல்லை என்று ஆட்டோ தொழிற்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஆட்டோ முன்பதிவுக்கான அரசு செயலியை கேரள அரசு கடந்தாண்டு தொடங்கியது. அதாவது கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட அந்த செயலிக்கு 'கேரளா சவாரி' (Kerala Savari) என பெயர் வைக்கப்பட்டது.
'கமிஷன் கேட்க கூடாது'
அந்த வகையில், கேரளா மாநிலத்தின் அந்த முன்னெடுப்பை பின்பற்றி தமிழ்நாட்டிலும் அரசு சார்பில் தனி செயலியை (Auto Booking App) தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. தமிழ்நாடு முழுவதும் 3.20 லட்சம் ஆட்டோக்கள் இயங்குகின்றன. சென்னையில் மட்டும் 1.20 லட்சம் ஆட்டோக்கள் இயங்குகின்றன. இந்த தொழிலை நம்பி தமிழ்நாடு முழுவதும் 4.50 லட்சம் ஓட்டுநர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓலா, உபேர் போன்ற தனியார் செயலிக்கு மாற்றாக அரசே செயலியை ஏற்று நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்திருந்த நிலையில், அரசு வேறொரு தனியார் அமைப்புடன் இணைந்து செயலி உருவாக்குவதாக தெரிவித்திருப்பதால் தொழிற்சங்கத்தினர் அதற்கும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த செயலியை பயன்படுத்துவதற்கு ஆட்டோ ஓட்டுநர்கள் அல்லது ஆட்டோ பயணிகளிடம் இருந்து நிறுவனம் எந்தக் கமிஷனையும் வசூலிக்கக் கூடாது என்பதையும் தொழிற்சங்கத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர்.
மேலும் படிக்க | கலாம் போல உருவாக என்ன செய்ய வேண்டும்? முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் பதில்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ