சூதாட்ட நிறுவனங்களுடன் திமுக அமைச்சர்களுக்கு தொடர்பு - அண்ணாமலை அதிரடி!

BJP Annamalai Allegation On DMK Ministers: ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கும் சில திமுக அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது என்று தான் நினைப்பதாக மதுரை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Written by - Sudharsan G | Last Updated : Mar 24, 2023, 10:53 AM IST
  • ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தின் மீது நிறுவனங்கள் வழக்கு போட்டால் திமுக என்ன செய்யும் - அண்ணாமலை
  • ராகுல் காந்தி பதவி பறிப்போகும் என அண்ணாமலை கருத்து.
  • காங்கிரஸ் மாநில தலைவர்கள் பின் வெறும் மூன்று பேர்தான் இருக்கின்றனர்.
சூதாட்ட நிறுவனங்களுடன் திமுக அமைச்சர்களுக்கு தொடர்பு - அண்ணாமலை அதிரடி!

BJP Annamalai Allegation On DMK Ministers: டெல்லியில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் தூத்துக்குடி செல்வதற்காக மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த தமிழ்நாட்டு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலைக்கு மதுரை விமான நிலையத்தில் மதுரை மாநகர் மற்றும் மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.

ராகுல் பதவி பறிப்போகும்

தொடர்ந்து, அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"நேற்றைய தினம் ராகுல் காந்திக்கு குஜராத்தில் உள்ள சூரத் நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு பதிவு செய்து 2 ஆண்டு சிறை தண்டனை வழங்கி உள்ளது. 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராகுல் காந்திக்கு பதவி பறிபோகும். 

ராகுல் காந்தியின் சர்ச்சை பேச்சு என்னவென்றால், உலகில் உள்ள மோசடி செய்வர்களில் பெயர்கள் மோடி என்ற பெயரில் உள்ளது என கருத்து தெரிவித்திருந்தார். குஜராத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மோடி என்று துணை பெயர்கள் உள்ளது. அவர் ஒட்டுமொத்தமாக விமர்சனம் செய்ததால் வழக்கு பதிவு செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

வராத ரயில் பாதையில் போராட்டம்

டெல்லியில் நடந்து சென்ற பெண்கள் மீது பாலியல் தொல்லை நடந்ததாக குற்றஞ்சாட்டினார். ஆனால் காவல்துறை அதிகாரிகள் யார் என்று சொல்லுங்கள் நடவடிக்கை எடுப்போம் என கூறியதற்கு ராகுல் காந்தியால் விளக்கம் அளிக்க முடியவில்லை.

தமிழகத்தில் பாஜக கட்சி குறித்து அவதூறு செய்கிறார்கள். வராத ரயில் பாதையில் நின்று போராட்டம் நடத்துகிறார்கள், ஒரு கட்சியின் மாநில தலைவர் பின்னால் மூன்று பேர்தான் நிற்கிறார்கள். காங்கிரஸ் கட்சியில் கை சின்னத்தில் கூட 5 விரல்கள் உள்ளது. ஆனால்., ஒரு மாநில தலைவர் பின்னால் பெரும் 3 பேர்தான் உள்ளனர்.

பாரதிய ஜனதா கட்சியில் தேசிய தலைவர் முதல் இந்தியாவின் கடைசி தொண்டர்கள் வரை கட்சியை வலுப்படுத்த வேண்டும், ஆட்சியில் அமர வேண்டும் என்பதே நோக்கமாக உள்ளனர். டெல்லி பயணம் வழக்கமான ஒன்றுதான். கர்நாடகா மற்றும் தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் தேர்தலுக்காக தலைவர்களை சந்திக்க சென்றேன். தமிழகத்தில் தேர்தல் களம் புதிது புதிதாக உள்ளது. தமிழகத்தில் தேர்தல் களத்தை பற்றியும், இடைத்தேர்தல் பற்றியும் தேசிய தலைவரை சந்தித்து பேசினோம்.

மேலும் படிக்க | Online Rummy Ban Bill: காகிதத்தால் அல்ல... இதயத்தால் உருவாக்கப்பட்ட சட்டம்... மசோதா மீண்டும் நிறைவேற்றம்!

அவதூறு வழக்கு

பாஜகவை பொறுத்தவரை எல்லோரும் வளர வேண்டும் என்று நாங்கள் நினைக்கிறோம், யார் வரவேண்டும் என்பதை மக்கள் தான் முடிவு செய்வார்கள். எங்களைப் பொறுத்தவரை அதிமுக பாஜக கூட்டணியில் மாற்றம் இல்லை. அதிமுக கூட்டணியில் இருந்தாலும் 50 ஆண்டுகள் உள்ள கட்சி அவர்கள் தாங்கள் வளர வேண்டும் என்பதுதான் அவர்கள் கருத்து. நாங்களும் அதைதான் விரும்புகிறோம்.

தமிழகத்தில் முதல் முறை அவதூறாக விமர்சனம் செய்தது திமுக அரசை விமர்சனம் செய்தது உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பதிவிட்டவர்கள் மீது எத்தனை நடவடிக்கை எடுத்து உள்ளார்கள்.  எத்தனை IT வழக்கு உள்ளது. சமூக வலைத்தளங்களில் என்னை பொறுத்தவரை இந்தியாவிலேயே அவதூறு வழக்கான IT வழக்கில் தமிழகம்தான் முதலில் இருக்கும். 

அமைச்சர்களுக்கு தொடர்பு

நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்பது போல ஆன்லைன் தடை சட்டத்தை நிறைவேற்றி அனுப்பும் ஆளுநர் கையெழுத்திட்டு அனுப்புவார். ஆனால் நூறு சதவீதம் சூதாட்ட ரம்மி நிறுவனங்கள் நீதிமன்றத்திற்கு சென்று வழக்கு தொடர்ந்தால் திமுக அரசு என்ன செய்யும். 

ஆளுநர் குறிப்பிட்டுள்ள சட்டத் திருத்தங்களை திருத்தி இருந்தால் சரியாக இருந்திருக்கும் என அப்போது திமுக அரசு நினைக்கும். அப்போது சட்ட அமைச்சர் மக்களிடம் என்ன விளக்கம் கொடுப்பார். என்னை பொறுத்தவரை ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களுக்கும் சில திமுக அமைச்சர்களுக்கு தொடர்பு உள்ளது என நினைக்கிறேன். ஊழல் பட்டியலை வரும் ஏப். 14ஆம் தேதி நிச்சயம் வெளியிடுவேன். அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.

மேலும் படிக்க | ஆன்லைன் விளையாட்டுகளை ஒழுங்குபடுத்தும் மசோதா, 2022... பாஜக அறிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

More Stories

Trending News