திமுகவின் 17 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் இருக்கிறது - அண்ணாமலை கொடுத்த சிக்னல்

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக கமிஷனுக்காக பட்ஜெட் போடுவதாக குற்றம்சாட்டியுள்ளார். பாஜக ஆட்சிக்கு வந்தால் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.   

Written by - S.Karthikeyan | Last Updated : Feb 22, 2024, 11:08 AM IST
  • அண்ணாமலை அரவக்குறிச்சியில் பாதயாத்திரை
  • திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு
  • மத்தியில் பாஜக ஆட்சி மீண்டும் அமையும்
திமுகவின் 17 அமைச்சர்கள் மீது ஊழல் வழக்குகள் இருக்கிறது - அண்ணாமலை கொடுத்த சிக்னல் title=

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கரூர் மாவட்டத்தில் உள்ள அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னதாராபுரத்தில் என் மண் என் மக்கள் பாதயாத்திரை மேற்கொண்டபோது திமுக அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். பாஜக ஆட்சிக்கு வந்தால் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்கப்படும் என்ற அவர், மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வருவது உறுதி என கூறினார். 

மூன்றாவது முறையாக மோடி ஆட்சி

கரூர் மாவட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சொந்த தொகுதியான அரவக்குறிச்சியில் "என் மண் என் மக்கள்" நடைபயணத்தை  மேற்கொண்டார். அவர் இந்த பாதயாத்திரை செல்லும் 225வது தொகுதி இதுவாகும். சின்னதாராபுரம் பகுதியில் நடைபெற்ற இந்த நடைபயணத்தில் கட்சி தொண்டர்களுடன் சுமார் 2 கி.மீ நடந்தார். நடைபயணத்தை முடித்துவிட்டு கூட்டத்தில் பேசிய அண்ணாமலை, " மூன்றாவது முறையாக  நரேந்திரமோடி ஆட்சிக்கு வருவார். எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. 400 தொகுதிக்கு மேல் பாஜக கூட்டணி வெற்றி பெறுவோம்.

மேலும் படிக்க | தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியின் முழு பயண திட்டம்.! எங்கு செல்கிறார்?

திமுக கமிஷன் போடுவதற்காக பட்ஜெட் போடுகிறது

தமிழகத்தில் ஊழல் ஆட்சி குடும்ப ஆட்சியாக இருந்து வருகிறது. உதாரணம் செந்தில் பாலாஜி 250 நாட்கள் சிறையில் இருந்து வருகிறார். அவரது தம்பி அசோக்குமார் தலைமறையாய் இருந்து வருகிறார். காவல்துறை ஊழலுக்கு துணை போகிறதா என்ற சந்தேகம் எழுகிறது."என்றார். தொடர்ந்து பேசிய அவர், " திமுகவை சேர்ந்த 17 மந்திரிகள் மீது ஊழல் வழக்குகள் இருந்து வருகிறது. தமிழக அரசுக்கு 8 லட்சத்து 23 ஆயிரம் கோடி கடன் உள்ளது. அந்த கடனை அடைக்க 80 ஆண்டுகளுக்கு மேல் ஆகும். திமுக கமிசன் போடுவதற்காக பட்ஜெட் போடுகிறது. 

கள்ளுக்கடைகள் திறக்கப்படும், டாஸ்மாக் மூடப்படும்

பாஜக தொலைநோக்குடன் பட்ஜெட் போடுகிறது" என குற்றம் சாட்டினார். மேலும், "தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் கள்ளுக்கடைகள் திறக்கப்படும். டாஸ்மாக் கடைகள் மூடப்படும். அரசு வேலை இல்லாத குடும்பத்திற்கு வேலை கிடைக்க ஏற்பாடு செய்யபடும். மாவட்டத்திற்கு 2 நவோதயா பள்ளிகள் திறக்கபடும். அவற்றுக்கு காமராஜர் பெயர் சூட்டப்படும். பாஜக ஆட்சியில் காவல்துறையினரின் சம்பளம் இரட்டிப்பு செய்யப்படும். 8 மணி நேரம் மட்டுமே வேலை என்ற நிலை உருவாக்கப்படும். டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிந்து 14 மாதமாக ரிசல்ட் வரவில்லை. பாஜகவின் திட்டங்கள் மக்களுக்கு வரக்கூடாது என திமுக செயல்படுகிறது" என்றும் அண்ணாமலை பேசினார்.

மேலும் படிக்க | தேசிய நெடுஞ்சாலை விபத்தில் சிக்கிய ஓட்டுநர்: போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News