திருப்பூர் மாவட்டம் பல்லடத்தையடுத்த மாதப்பூர் பகுதியில் வருகின்ற 27ஆம் தேதி நடைபெற உள்ள ’என் மண் என் மக்கள்’ நிறைவு விழா நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். இதற்கான முன்னேற்பாடு பணிகள் பாஜக சார்பில் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடி தமிழ்நாடு வருவது முதல் மீண்டும் செல்வது வரையிலான பயண திட்டம் விவரம் வெளியாகியுள்ளது.
பிரதமர் மோடியின் 27 மற்றும் 28 ஆம் தேதிக்கான தமிழக பயணம் குறித்த பயண திட்டம்:
- மதியம் 1.20 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் இருந்து, விமானம் மூலம் மதியம் 2.06 மணிக்கு கோவை சூலூர் வருகிறார்.
- மதியம் 2.10 மணிக்கு சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பல்லடம் செல்கிறார் பிரதமர்.
- 2.45 முதல், 3.45 வரை என் மண், என் மக்கள் பயணம் நிறைவு விழா மற்றும் பொதுகூட்டத்தில் கலந்துகொள்கிறார் பிரதமர்.
மேலும் படிக்க | தேசிய நெடுஞ்சாலை விபத்தில் சிக்கிய ஓட்டுநர்: போராடி மீட்ட தீயணைப்புத் துறையினர்
- 3.50 மணிக்கு பல்லடத்தில் இருந்து, பல்லடம் விரைந்து, அங்கிருந்து 5.05 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் மதுரையை சென்றடைகிறார்..
- 5.15 மணி முதல் 6.15 மணி வரை மதுரையில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் பிரதமர்.
- 6.15 முதல் 6.45 மணிக்குள் மதுரையில் உள்ள தனியார் நட்சத்திர விடுதிக்கு சென்று அன்று இரவு ஓய்வு எடுக்கிறார் பிரதமர்.
- அன்றைய தினம் அரசியல் கட்சிகளின் முக்கிய தலைவர்கள் மற்றும் பிரமுகர்களை சந்திக்கிறார்.
28.02.2024 ஆம் தேதி பயண விவரம்
- காலை 8.15 மணிக்கு விடுதியில் இருந்து சாலை மார்க்கமாக மதுரை விமான நிலையம் செல்கிறார்.
- 8.40 மணிக்கு மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக தூத்துக்குடிக்கு 9.00 மணிக்கு சென்றடைகிறார்.
- 9.45 மணி முதல் 10.30 மணி வரை அரசின் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்கிறார்.
- 10.35 மணிக்கு தூத்துக்குடியில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக புறப்பட்டு, 11.10 மணிக்கு திருநெல்வேலி செல்கிறார்.
- 11.15 to 12.15 மணிக்கு பாஜக பொதுகூட்டத்தில் பங்கேற்கிறார்.
- 12.30 மணிக்கு ஹெலிகாப்டர் மூலம் கேரள மாநிலம் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி.
பல்லடத்தில் ரோபோ மூலம் பிரச்சாரம்
இந்நிலையில் பிரதமர் மோடி கலந்து கொள்ள உள்ள நிகழ்ச்சி குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு விதங்களில் பாஜகவினர் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பல்லடம் என்ஜிஆர் சாலையில் பாஜக கட்சியினர் சார்பாக ரோபோ மூலம் பொதுமக்களுக்கு நோட்டீஸ் வழங்கி பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் கொண்டு சென்று வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மேலும் படிக்க | த்ரிஷா - கூவத்தூர் சர்ச்சை... ஏவி ராஜூ மீது நடிகர் கருணாஸ் புகார்..!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ