பலே குற்றச்சாட்டில் சிக்கிய தமிழக ஐபிஎஸ் அதிகாரி! திருமண ஆசை கூறி பலவந்தம்! பகீர் பின்னணி!

தமிழக போலீஸ் வட்டாரத்தையே தற்போது ஒரு செய்தி பரபரப்பாக்கியுள்ளது. ஒரு ஐபிஎஸ் அதிகாரி மீது அடுத்தடுத்து புகார்கள் கிளம்ப இப்போது அவர் மீதான குற்றச்சாட்டும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. யார் அந்த ஐபிஎஸ் அதிகாரி? அவர் மீதான குற்றச்சாட்டுகள் என்ன?   

Written by - Bhuvaneshwari P S | Edited by - RK Spark | Last Updated : May 31, 2023, 03:09 PM IST
  • திருமணத்தை மறைந்த ஐபிஎஸ் அதிகாரி.
  • வேறொரு பெண்ணுடன் டேட்டிங் செய்துள்ளார்.
  • வழக்கு விசாரணை இறுதி கட்டத்தை எட்டி உள்ளது.
பலே குற்றச்சாட்டில் சிக்கிய தமிழக ஐபிஎஸ் அதிகாரி! திருமண ஆசை கூறி பலவந்தம்! பகீர் பின்னணி! title=

கட்டுமஸ்தான உடல்... பிட்னஸ் அட்வைஸ்... செல்லப்பிராணிகள் மீது அளவு கடந்த பாசம்... யுபிஎஸ்இ தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உதவி என சமூக வலைதளத்தில் தன்னை படங்களில் வரும் ஹீரோ போல காட்டி வந்தார் அந்த நட்சத்திர ஐபிஎஸ் அதிகாரி. அவரது தோற்றமும் இளம் தலைமுறையினரை கவர்ந்ததால் சமூக வலைதளத்தில் பிரபலமானார். அவர் வேறு யாரும் இல்லை, இப்போது பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள செல்வ நாகரத்தினம் தான். கடந்த 2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் நடத்திய பேரணியில் அப்போதைய தூத்துக்குடி ஏ எஸ் பி செல்வ நாகரத்தினம் தலைமையிலான தலைமையிலான போலீசார் உருட்டுக்கட்டைகளால் அவர்கள் மீது தடியடி நடத்தினர். அந்த வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க பலரும் குரல் கொடுத்ததால், அவர் திருச்சிக்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். 

மேலும் படிக்க | செந்தில் பாலாஜியை ரவுண்ட் கட்டிய சவுக்கு சங்கர்! சிக்கப்போகும் அமைச்சர்!

இவர் மீது தான் பெண் ஒருவர் திருமணம் செய்வதாகக் கூறி ஏமாற்றி விட்டதாக புகார் அளித்துள்ளார். கடந்த 2019-ம் ஆண்டு இன்ஸ்டாவில் செல்வ நாகரத்தினத்தை அந்தப் பெண் பாலோ செய்துள்ளார். அவரது போஸ்டுகளை லைக் செய்து வந்துள்ளார். இப்படிப்பட்ட சூழலில் அந்த பெண்ணுக்கு மெசேஜ் அனுப்பி வலை விரித்துள்ளார் இந்த ஐபிஎஸ். அந்தப் பெண்ணும் போலீஸ் அதிகாரி என்பதால் யுபிஎஸ்இ சம்மந்தமான சந்தேகங்களை கேட்டு அப்படியே மெசேஜ் செய்துள்ளார். இந்தப்பழக்கம் நாளடைவில் நெருக்கமாகியுள்ளது. ஏற்கனவே திருமணம் ஆன செல்வ நாகரத்தினம், தனது மனைவியை பிரிந்து வாழ்வதாக அந்தப்பெண்ணிடம் கூறி பிரபோஸ் செய்துள்ளார். அவரை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த ஆசை வார்த்தைகளை நம்பி, அந்தப்பெண்ணும் இவரும் அடிக்கடி வெளியே செல்ல தொடங்கியுள்ளார். அதோடு எப்போது ஹோட்டலில் ரூம் எடுத்தாலும் தனது பெயரிலேயே புக் செய்வாராம் செல்வ நாகரத்தினம். இதனால் இவர் மீது அந்தப்பெண்ணுக்கு சந்தேகம் கூற வரவில்லையாம். 

மேலும் படிக்க | என்னை முதல்வர் ஆக்கினால் 150 வயது வரை உயிருடன் இருக்கலாம் - சரத்குமார்!

இப்படிப்பட்ட சூழலில், திடீரென தனது மனைவியுடன் சிரித்துக்கொண்டு ஜாலியாக இருக்கும் புகைப்படத்தை செல்வ நாகரத்தினம் திடீரென சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார். இதனைக்கண்டு ஷாக்கான அந்தப் பெண் அவரிடம் முறையிட்டுள்ளார். இதனால் கடுப்பான அவர், உன்னை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. தான் ஏமாற்றப்பட்டதை அறிந்ததும் அந்தப் பெண் அதிர்ச்சி அடைந்தார்.   அவர் செல்வ நாகரத்தினம் குறித்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் இமெயில் மூலம் தமிழக டிஜிபிக்கு புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீஸார், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு அறிக்கை தாக்கல் செய்தது. உடனே செல்வ நாகரத்தினம் ஐபிஎஸ்-க்கு மெமோ அனுப்பப்பட்டு 30 நாட்களில் விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்து மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் அவர் மனுதாக்கல் செய்தார். தன் மீதான ஒழுங்கு நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டிருந்தார். இந்த மனு நிராகரிக்கப்பட்டது. 

உடனே சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், தனக்கு திருமணம் ஆனது தெரிந்து தான் அந்தப் பெண் பழகினார் என்றும், திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளிக்கவில்லை என்றும் இந்த வழக்கில் சிபிசிஐடி முறையாக விசாரணை நடத்தவில்லை என்றும் தெரிவித்திருந்தார் செல்ல நாகரத்தினம். இந்த வழக்கில் செல்வ நாகரத்தினம் மனு குறித்து காவல்துறை டிஜிபி, சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவிட்டு ஜூன் 5-ம் தேதிக்கு விசாரணையை ஒத்தி வைத்துள்ளார். வழக்கு ஒருபக்கம் நடந்தாலும், சமூக வலைதளங்களில் பலரும் செல்வ நாகரத்தினம் குறித்து வெளியான செய்திகளை பதிவிட்டு அவருக்கு எதிராக தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே பாலியல் குற்றச்சாட்டில் முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ் சிக்கியுள்ள நிலையில், இப்போது மற்றொரு ஐபிஎஸ் அதிகாரியும் சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | கோடி கணக்கில் கட்டப்படும் செந்தில் பாலாஜியின் புதிய வீடு! அதிகாரிகள் சோதனை!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News