அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தினகரனை தவிர்த்து அதிமுகவில் யார் வேண்டுமானாலும் இணையலாம் என தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்!
கடந்த நவம்பர் 15 ஆம் தேதி தமிழகத்தை தாக்கிய கஜா புயல் தமிழகத்தின் திருவாரூர், தஞ்சை, நாகை, கடலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களை மிக மோசமாக சிதைத்துள்ளது. கஜா புயலில் சிக்கி 45 பேர் பலியாகியுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த கோர தாண்டவத்தில் சுமார் 1,70,000 மரங்கள், 1,17,000-க்கும் அதிகமான வீடுகள் சேதமாகியுள்ளதுவும் தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது.
இதையடுத்து, புயலார் பாதித்த பகுதிகளுக்கு அனைவரும் நிவாரண பொருட்களை வணகி வருகின்றனர். இந்நிலையில், திமுக சார்பில் புயலால் பாதித்த மக்களுக்கு உதவிப்பொருட்களை கொடியசைத்து அனுப்பி வைத்தார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய பழனிசாமி கூறுகையில், டி.டி.வி.தினகரனை தவிர யார் வேண்டுமானாலும் அ.தி.மு.கவில் இணையலாம் என்றும் பிரிந்து சென்றவர்களை அழைப்பது தனது கடமை என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் விமான நிலையத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "மேகதாது விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம்.
எந்த கட்சிக்கு செல்ல வேண்டும் என்பது அவரவர் விருப்பம், ஆனால் அழைக்க வேண்டியது எங்கள் கடமை. ஜெயலலிதா கட்டிக்காத்த கட்சிக்கு பிரிந்து சென்ற தொண்டர்கள் மீண்டும் வரவேண்டும். தினகரனை தவிர்த்து யார் வேண்டும் என்றாலும் அதிமுகவில் இணையலாம்.
குறை சொல்வது எளிது. கஜா புயல் நிவாரண பணிகளை அரசு செய்து வருகிறது. எதிர்கட்சிகள் தொடர்ந்து குறை கூறிக்கொண்டு தான் இருப்பார்கள்" என்றார்.