அரவக்குறிச்சி தொகுதி வாக்கு எண்ணிக்கை செய்ய புதிய முடிவு?

அரவக்குறிச்சி தொகுதியில் பதிவான வாக்குகளை 32 சுற்றுகளாக எண்ண முடிவு தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. 

Last Updated : May 21, 2019, 12:23 PM IST
அரவக்குறிச்சி தொகுதி வாக்கு எண்ணிக்கை செய்ய புதிய முடிவு? title=

அரவக்குறிச்சி தொகுதியில் பதிவான வாக்குகளை 32 சுற்றுகளாக எண்ண முடிவு தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. 

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்று முடிந்தது. இந்த தொகுதியில் மொத்தம் 63 பேர் போட்டியிட்டனர்.

மொத்தமுள்ள 2,05,273 வாக்காளர்களில் ஆண் வாக்காளர்கள் 81,143 பேரும், பெண் வாக்காளர்கள் 91,972 பேரும் என மொத்தம் 1,73,115 பேர் வாக்களித்துள்ளனர். 4 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அரவக்குறிச்சி தொகுதியில்தான் அதிக வாக்குகள் பதிவாகியுள்ளது. நாளை மறுநாள் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

இந்தநிலையில் வாக்கு எண்ணிக்கை முன்னேற்பாடு பணிகள் குறித்து நேற்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அரவக்குறிச்சி தொகுதிக்கான வாக்கு எண்ணும் அறை மிகவும் சிறியதாக உள்ளதால், அத்தொகுதிக்கான வாக்கு எண்ணிக்கையை 17 சுற்றுகளில் இருந்து 32 சுற்றுகளாக எண்ண முடிவு செய்யப்பட்டது. மேலும் இடப்பற்றாக்குறை உள்ளதால் வாக்கு எண்ணிக்கைக்கு 14 மேஜைகளுக்கு பதில் 8 மேஜைகள் போடப்பட்டு வாக்குகள் எண்ணப்பட உள்ளது.

Trending News