சென்னையில் பாமக - பாஜக தொண்டர்கள் மோதல்!!

பாமக மற்றும் பாஜக தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதால் சென்னையில் பரபரபப்பு நிலவி வருகிறது.

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 25, 2018, 02:53 PM IST
சென்னையில் பாமக - பாஜக தொண்டர்கள் மோதல்!!  title=

பாமக மற்றும் பாஜக தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதால் சென்னையில் பரபரபப்பு நிலவி வருகிறது.

தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ராமதாஸ் குறித்து பதிவிட்டு இருந்தார். அதில், 

அய்யா என்றுதான் மரியாதையுடன் அழைக்க என அய்யா சொல்லி வளர்ந்த எனக்கு தங்கள் பதிவில் உள்ள அய்யோ அய்யோ என நாகரீகமற்ற சொற்றொடர்களை கண்டதும் எங்களுக்கு இல்லாத பொது அறிவு தங்களுக்கு இருப்பதாக தாங்களே கூறிக்கொள்வது என்னை புல்லரிக்கவைக்கிறது  நன்றி. 

என் அரசியல் அனுபவம் 20 ஆண்டு கால முழுநேர அரசியல் பணி.என் உழைப்பபுக்கு கட்சி வழங்கிய அங்கீகாரம்தான் நான் படிப்படியாகப்பெற்ற பதவிகள்.வாரிசு என்று சொல்லி பதவியை வாரிச்சுருட்டவில்லை.பதில் சொல்வதிலும் நாகரீகம் வேண்டும் என்பது தங்களுக்கும் உங்களுக்கு ஆதரவாகபதிவிடுவோருக்கும் தேவை.

சுகாதாரஅமைச்சராக இருந்த காலத்தில் நாடெங்கும் பல தரமற்ற புதிய மருத்துவக்கல்லூரிகள் துவங்க முறையற்ற அனுமதிகள் வழங்கியதில்  நீங்கள் காட்டிய வேகம் விவேகம் ஏன் தமிழகத்திற்கு எய்ம்ஸ் கொணரகாட்டவில்லை?மருத்தவகல்லூரிஅனுமதி ஊழல் வழக்குக்காக இன்னமும் நீதிமன்றம் அலைவதும் மக்களுக்கு தெரியும்

நிதி ஒதுக்கியதாகச்சொல்கிறீர்கள்.அதன்பின்பும் பாராளுமன்ற உறுப்பினராகத்தொடரும் நீங்கள் எத்தனைமுறை மதுரை எய்ம்ஸ் பற்றி பேசினீர்கள் தர்மபுரிக்கும் எய்ம்ஸ் வேண்டும் என்றுதானே குழப்பினீர்கள்?அரசியல் அனுபவம் பற்றி பேசுகிறீர்கள்.நான் தந்தை நிழலில் பதவி பெறவில்லை சாதியைவைத்துசாதிக்கவில்லை

பட்டுக்கோட்டைக்கு வழிகேட்டால் கொட்டைப்பாக்குக்கு விலை சொல்வது போல் மத்தியசுகாதார அமைச்சராக இருந்த உங்களால் ஏன்தமிழகத்தில் முழுமையான எய்ம்ஸ் மருத்தவமனையைக்கொண்டு வர முடியவில்லை என்று கேட்டால் தோப்பூரில் அடிக்கல் நாட்டியதையும் மதுரை ராஜாஜி மருத்தவமனைக்கு எய்மஸ்அளவ்வுக்கு உயர்த்த...... என கடுமையாக விமர்சித்து பதிவிட்ருந்தார்.

இதனால் ஆத்திரமடைந்த பாமக தொண்டர்கள் தமிழிசை சவுந்தரராஜன் பதிவிட்டதை கண்டித்து பாமக தொண்டர்கள் சென்னையில் உள்ள பாஜக அலுவலகத்தை நோக்கி பேரணி சென்றனர். அப்பொழுது அங்கு வந்த பாஜக தொண்டர்கள் மோதலில் ஈடுபட்டனர். இந்த மோதலில் பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது. மேலும் அங்கு சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இரு தரப்புக்கும் ஏற்பட்ட மோதலில் பலர் கைது செய்யப்பட்டனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Trending News