O Panneerselvam, Lok Sabha Election 2024: மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேசிய அளவில் பார்த்தால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும், இந்தியா கூட்டணிக்கும் கடும் போட்டி நிலவும் சூழலில், தமிழ்நாட்டில் பார்த்தோமானால் திமுக - அதிமுக - பாஜக ஆகிய கட்சிகளின் தலைமையில் கடும் போட்டி நிலவுகிறது.
திமுக கூட்டணி தனது கூட்டணி கட்சிகளுக்கு இடையே தொகுதி பங்கீடு முடிவடைந்து, காங்கிரஸ் கட்சியை தவிர அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டது. அதிமுக கூட்டணியில் தேமுதிக மட்டுமே இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. இப்படி தேர்தல் களம் சூடுபிடித்திருக்கும் சூழலில், பாஜகவும் தனது வேட்பாளர் பட்டியல் மற்றும் தனது கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளை அறிவித்துள்ளது.
இரட்டை இலை மீட்பு...
முன்னதாக, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்றுள்ள ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அதில், வரும் மக்களவை தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சை சின்னத்தில் தானே போட்டியிட உள்ளதாக ஓபிஎஸ் அறிவித்தார். மேலும், இரட்டை இலை சின்னத்தை கைப்பற்றுவதே நோக்கம் என்றும், தற்போது தொண்டர் பலத்தை நிரூபிக்கும் விதமாக இந்த தேர்தலை தானே சந்திக்க இருப்பதாகவும் ஓபிஎஸ் தெரிவித்தார்.
மேலும் படிக்க | கோவையில் அண்ணாமலை... தென் சென்னையில் தமிழிசை - பாஜக வேட்பாளர் பட்டியலில் ட்விஸ்ட்!
இந்த தர்ம யுத்தத்திற்கு, அதிக இடங்கள் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம், அதிமுக மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு, இரட்டை இலையை மீட்டெப்பதற்கான சட்டப் போராட்டம் தொடரும். 15 மேற்பட்ட தொகுதிகள் கேட்டோம், இரட்டை இலை சின்னத்தில் தான் வெற்றி வேண்டும் என தொண்டர்கள் கோரிக்கை வைத்தனர். ஒரு தொண்டரையை நிறுத்துவதை விட நானே நிற்கிறேன்" என்றார்.
இரட்டை இலையை எதிர்த்து ஓபிஎஸ் போட்டி
இதுவரை ஓபிஎஸ் களம் கண்ட அத்தனை தேர்தல்களும் இரட்டை இலை சின்னத்திலேயே போட்டியிட்டார், அதிலும் வெற்றியும் பெற்றார். ஆனால் இன்று முதல்முறையாக அந்த இரட்டை இலை சின்னத்திற்கு எதிராகவே தேர்தலில் களம் காண்கிறார். அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாளை எதிர்த்தும், திமுக கூட்டணியில் ஐயூஎம்எல் வேட்பாளர் நவாஸ்கனியை எதிர்த்தும் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிடுகிறார்.
இன்று கழக ஒருங்கிணைப்பாளர் செய்தியாளர் சந்திப்பு! (21.03.2024) நேரலை
https://t.co/OZFBxMpvbI— O Panneerselvam (@OfficeOfOPS) March 21, 2024
பாஜக கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகள்
ஓபிஎஸ் அறிவிப்பை தொடர்ந்து, பாஜகவின் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகளின் பட்டியல் வெளியாகி உள்ளது. ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு தென்காசி தொகுதியும், அமமுகவுக்கு திருச்சி மற்றும் தேனி தொகுதிகளும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு ஸ்ரீபெரும்புதூர், ஈரோடு, தூத்துக்குடி தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. தேவநாதனின் தமிழ்நாடு மக்கள் கல்வி முன்னேற்ற கட்சிக்கு சிவகங்கை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய நீதி கட்சிக்கு வேலூர், இந்திய ஜனநாயக கட்சிக்கு பெரம்பலூர் தொகுதியும் ஏற்கெனவே ஒதுக்கப்பட்டது.
பாமக போட்டியிடும் தொகுதிகள்
தற்போது பாமக போட்டியிடும் 10 தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது. காஞ்சிபுரம், அரக்கோணம், தர்மபுரி, ஆரணி, விழுப்பும், கள்ளக்குறிச்சி, சேலம், திண்டுக்கல், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் அணியை அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு என்ற பெயரில் குறிப்பிட்டுள்ள பாஜக, ராமநாதபுரத்தை ஒதுக்கியிருக்கிறது. தமிழ்நாட்டில் மீதம் உள்ள 19 தொகுதிகளில் பாஜக போட்டியிடுகிறது.
பாஜக நேரடியாக போட்டியிடும் தொகுதிகள்
அதில் ஏற்கெனவே 7 தொகுதிகளுக்கு வேட்பாளரை அறிவித்த நிலையில், பாஜக போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 23 தொகுதிகளில் பாஜக தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறது. திருவள்ளூர், வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், பொள்ளாச்சி, கரூர், சிதம்பரம், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய தொகுதிகளில் பாஜக நேரடியாக போட்டியிடுகிறது. இதில் குறிப்பாக, விளவங்கோடு இடைத்தேர்தலுக்கான வேட்பாளர்களை திமுக, பாஜக இன்னும் வெளியிடவில்லை. அதிமுக மட்டுமே அங்கு வேட்பாளரை நிறுத்தி உள்ளது.
மேலும் படிக்க | பாஜக சார்பாக தமிழகத்தில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிவிப்பு..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ