அதுவொரு சமபந்தி விருந்து. நரிக்குறவ இனத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. அதை வேதனையாக அவர் சமூக ஊடகத்தின் மூலம் பதிவு செய்கிறார். அடுத்த சில நாட்களுக்குப் பிறகு காட்சிகள் அப்படியே மாறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்தப் பெண்ணுக்கு சாதி சான்றிதழ், அரசு ஆவணங்கள் உள்ளிட்ட அனைத்தையும் தருகிறார். இந்த விவகாரம் குறவர், படுகர் இனம் உள்ளிட்ட பழங்குடி இனங்களுக்கு ஒரு நம்பிக்கையை அளித்துள்ளது. தற்போது அவர்களும் தைரியமாக முன்வந்து தங்களது கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.
மேலும் படிக்க | நரிக்குறவர் இல்லத் திருமண விழாவுக்கு திடீர் விசிட் அடித்த அமைச்சர்
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுக்கா துறவிக்காடு கடைவீதியில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது எம்ஜிஆர் நகர். இங்கு, 300க்கும் மேற்பட்ட பூம்பூம் மாட்டுக்கார குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அதாவது மாடுகளை வைத்து தொழில் செய்ததினால், அவர்களைப் பெரும்பாலும் பூம்பூம் மாட்டுக்காரர்கள் என்றே பொதுச்சமூகம் அழைப்பதுண்டு. எம்.ஜி.ஆர். நகரில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லாமல், அங்குள்ள கல்லணைக் கிளை வாய்க்கால் கரையோரத்தில் குடிசைகள் அமைத்து அவர்கள் வாழ்ந்து வருகின்றனர்.
தங்களது மூதாதையர்கள் பூம்பூம் மாட்டுத்தொழில் செய்தாலும், இப்போது இவர்கள் திருஷ்டி பொம்மைகள் விற்கும் பணியில் ஈடுபடுகின்றனர். மேலும் பலர் தப்பு, டிரம்ஸ் செட் அடிக்கும் பணியிலும், பெண்கள் சாலைகளில் கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களை சேகரித்து விற்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். ஆண் குழந்தைகளை படிக்க வைக்க முடியாமல் கூலி வேலைக்குச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
பெண் குழந்தைகள் பலருக்கும் சிறுவயதிலேயே திருமணம். மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி இவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் சொல்லில் அடக்க முடியாதவை. தமிழக அரசுக்கு இந்த மக்கள் சார்பில் பல கோரிக்கைகளை முன்வைக்கின்றனர். அவர்களின் உரிமைகளை அவர்களின் குரல்களிலேயே கேட்கலாம்.
1. குடியிருக்கும் பகுதியில் மின்சார வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டும்.
மேலும் படிக்க | தீபாவளி தினத்தில் சிறப்பான நிகழ்வு; தேடி சென்று உதவி செய்த முதல்வர் ஸ்டாலின்
2. எங்களது பிள்ளைகள் சாதி சான்றிதழ் இல்லாததால்தான் எட்டாம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாமல் போகின்றனர். பெண்கள் சிறுவயதிலேயே திருமணம் செய்துகொள்கின்றனர். எனவே, எங்களுக்கு சாதி சான்றிதழ் வேண்டும்.
3. இந்து ஆதியன் என்ற பெயரில் எங்களுக்கு சாதி சான்றிதழ் வேண்டும்.
4. அரசு எங்களுக்கு நிலப்பட்டா வழங்கியுள்ளது. ஆனால் இதுவரை இடத்தை அளந்து தரவில்லை. எங்களுக்கு இடத்தை அளந்து, தமிழக அரசு வீடு கட்டித் தர வேண்டும்.
5. சாதி சான்றிதழ் வழங்கினால், எங்கள் குழந்தைகள் படித்து வாழ்க்கையில் முன்னேறும். இதேபோல் ஒட்டங்காடு, பட்டுக்கோட்டை, ஆலடிக்குமுளை ஆகிய இடங்களில் வசிக்கும் எங்களின் மக்களுக்கும் சாதிச் சான்றிதழ் வேண்டும்.
தமிழக அரசின் காதுகளில் இவர்களின் கோரிக்கைகள் விழுமா ?!
மேலும் படிக்க | பாடப்புத்தகத்தில் சாதி பெயர்கள் நீக்கம்- தமிழக அரசு அதிரடி உத்தரவு
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR