டெல்டா பகுதிகளில் பலத்த மழையால் பெரும் பாதிப்பு: சிதம்பரம் கோயிலில் மழை நீர் புகுந்தது

உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயில் உட்பட சிதம்பரத்தின் பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 34 செ.மீ மழை பெய்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 5, 2020, 11:56 AM IST
  • புரெவி புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனத்த மழை.
  • அறுவடைக்கு தயாராக இருந்த விளைநிலங்களில் நீர் புகுந்தது.
  • 45 ஆண்டுகளுக்குப் பிறகு சிதம்பரம் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது.
டெல்டா பகுதிகளில் பலத்த மழையால் பெரும் பாதிப்பு: சிதம்பரம் கோயிலில் மழை நீர் புகுந்தது title=

திருச்சிராப்பள்ளி: தமிழகத்தில் புரெவி புயல் காரணமாக பெரும்பாலான மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. புரெவி சூறாவளி காரணமாக வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் டெல்டா மாவட்டங்களில் மிக அதிக மழை பெய்தது. குறிப்பாக கடலூரில் பெய்த பலத்த மழையால் ஏழு பேர் இறந்தனர், 35 வீடுகள் முற்றிலுமாக சேதமடைந்தன. 50,000 ஏக்கருக்கும் மேலான நெல் பயிர்கள் வெள்ளிக்கிழமை நீரில் மூழ்கின.

தமிழகத்தின் இப்பகுதிகளைப் பொறுத்தவரை, ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 20 செ.மீ மழை பெய்துள்ளது என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாகப்பட்டினத்தில் 23 செ.மீ., திருவாரூரில் 11 செ.மீ. மழையும் மிகவும் அதிகமாக திருத்துரைபூண்டியில் 219 மி.மீ மழையும் பெய்ததாக அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பலத்த மழையின் தாக்கத்தால், தஞ்சாவூரில் (Tanjore) பல வீடுகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. சிவஜோதி நகரில் ஒரு வீடு இடிந்து விழுந்ததில் வீட்டில் இருந்த இருவர் இடுபாடுகளில் சிக்கி உயிர் இழந்தனர். தஞ்சாவூர் அருகே சக்கரசமந்தமத்தில் சுவர் இடிந்து விழுந்ததில் ஒருவர் இறந்தார்.

கடலூரில் உள்ள நாதன் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் சுவர் இடிந்து விழுந்ததில் உயிர் இழந்தார். கடலூரில் உள்ள பெரியகட்டு பாளையம் பகுதியைச் சேர்ந்த ஒருவரும் பக்கத்து வீட்டு சுவர் இடிந்ததில் இடிபாடுகளில் சிக்கி உயிர் இழந்தார்.

இதற்கிடையில், மயிலாடுதுரை மாவட்டம் கொல்லிடத்தைச் சேர்ந்த ஒருவரும் அரியலூரில் உள்ள அருங்கல் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரும் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிர் இழந்தனர்.

புரெவி புயல் (Burevi Cyclone) காரணமால பெய்த பலத்த மழையால், தஞ்சாவூர் கொனகடுங்கலாறு மற்றும் அக்னியாற்றின் நீர் வயல்களில் புகுந்து, அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 20,000 ஏக்கர் நிலத்தின் பயிர்கள் நீரில் மூழ்கி பாழடைந்தன. தஞ்சாவூர் கலெக்டர் எம் கோவிந்த ராவ் நிவாரணப் பணிகளை பார்வையிட்டார். வயல்களில் புகுந்த நீரை மாற்றி விடுவதற்கான பணிகள் துரிதமாக நடந்து வருகின்றன.

இதேபோல், நாகப்பட்டினத்தில் 30,000 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின. சமீப நாட்களில் பெய்த கன மழையால் சம்பா வயல்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், விவசாய நிலங்கள் சேதமடைந்துள்ளதாகவும் டெல்டா விவசாயிகள் தெரிவித்தனர்.

ALSO READ: நகராமல் ஒரே இடத்தில் நீடிக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் - IMD

45 ஆண்டுகளுக்குப் பிறகு சிதம்பரம் கோயிலுக்குள் தண்ணீர் புகுந்தது

உலக புகழ்பெற்ற சிதம்பரம் (Chidambaram) நடராஜர் கோயில் உட்பட சிதம்பரத்தின் பல பகுதிகளில் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 34 செ.மீ மழை பெய்தது. கோயிலின் வெளிப்புற பிரகாரத்திற்குள் மழை நீர் நுழைந்து கோயில் வளாகத்தில் கிட்டத்தட்ட நான்கு அடி உயரத்திற்கு நீர் தேங்கிய நிலையில் இருந்தது. கோயிலைச் சுற்றியுள்ள வடிகால் கால்வாய்களில் உள்ள தேக்கம் காரணமாக கோயிலுக்குள் தண்ணீர் தேங்கியுள்ளதாக உள்ளூர் மக்களும் கோயில் நிர்வாகமும் குற்றம் சாட்டுகின்றன.

No description available.

சுமார் 45 ஆண்டுகளுக்குப் பிறகு கோயிலில் நீர் புகுந்து அனைத்து இடங்களிலும் நீர் தேங்கியுள்ளதாக கோயில் வட்டாரங்கள் தெரிவித்தன. மழைநீரை உடனடியாக வெளியேற்றுவதற்கு மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

ALSO READ: இன்று கரையை கடக்கும் ‘புரெவி’; 6 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவிப்பு!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News